கமல் பிறந்த நாளில் சிறப்பான சம்பவம் செய்ய போகும் மணிரத்திரம்!

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் என அனைவராலும் போற்றப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கமலஹாசன். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வரூபம் 2 ,தூங்காவனம், பாபநாசம் என அடுத்தடுத்த படங்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் நடிகர் கமலின் திரை உலகிற்கு மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமல் நடிக்க தொடங்கியுள்ளார். விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் இந்தியன் 2 படப்பிடிப்பின் பேட்ச் ஒர்க்கில் கமல் கலந்து கொண்டு வருகிறார்.

அதைத்தொடர்ந்து பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தில் கமல் வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்க உள்ளார். அதற்கு அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் கமல் தனது 233வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் கமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு ராணுவ வீரனாக களமிறங்க உள்ளார். இந்த இரண்டு படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் மேலும் ஒரு பிரம்மாண்ட இயக்குனருடன் கமல் கைகோர்த்துள்ளார். இயக்குனர் மணிரத்தினம், கமல் இணையும் 234வது படம் குறித்த பிரம்மாண்டமான அப்டேட் தற்பொழுது வரத் தொடங்கியுள்ளது.

மேலும் இந்த படத்திற்கான ப்ரீ ப்ரொடெக்க்ஷன் வேலைகளில் மணிரத்தினம் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த படத்திற்காக நடிகர் கமல் நீண்ட தாடியை வளர்த்து வருவதாகவும் படத்தில் நீண்ட தாடி கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகர் நாசர் நடிக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அடுத்தபடியாக கமலுடன் முதல் முறையாக வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் இந்த படத்தில் இணைய உள்ளதாகவும் சமீபத்திய தகவல் வெளியானது.

ஜெயிலர் படத்தின் தெறிக்க விடும் வெற்றியை தொடர்ந்து சம்பள விசயத்தில் கரார் காட்டும் ரஜினி!

இந்நிலையில் நடிகர் கமல் மற்றும் மணிரத்தினம் இணையும் 234வது படம் குறித்த தெறிக்கவிடும் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த மாத இறுதியில் கமல் 234வது படத்தின் டைட்டில் லுக் வீடியோ டீசர் படமாக்கப்பட உள்ளது.

மேலும் இந்த டீசர் கமல் பிறந்தநாள் அன்று நவம்பர் 7ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2020ஆம் வருடம் நவம்பர் 7 அன்று கமல் நடித்த விக்ரம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி கொண்டாட வைத்தது. அதேபோல் இந்த கமல் 234வது படமும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.