நடிகர் பிரேம்ஜியை கரம் பிடிக்கும் பாடகி! தை மாதத்தில் திருமணத்திற்கு ரெடியாகும் ஜோடி!

தமிழ் சினிமாவின் மிக பிரமாண்ட இசையமைப்பாளரான கங்கை அமரனின் இரண்டாவது மகன்தான் பிரேம்ஜி அமரன். நடிகர் சிம்புவின் வல்லவன் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான பிரேம்ஜி அதை தொடர்ந்து சிறந்த பின்னணி பாடகர் மற்றும் பாடல் ஆசிரியராக பல திறமைகளை கொண்டுள்ளார். இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவை போல கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி மிக சிறந்த இசை கலைஞராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முரட்டு சிங்கிளாக தனது வாழ்க்கை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார் நடிகர் பிரேம்ஜி. பல படங்களில் காமெடியனாகவும், வில்லனாகவும் நடித்து வந்த பிரேம்ஜி தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் GOAT திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பொதுவாக நடிகர் பிரேம்ஜிக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கும் இடையே அண்ணன் தம்பி உறவை தாண்டி மிகப்பெரிய நட்புறவு இருப்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. சமூக வலைதளங்கள், பொது மேடைகள் என அனைத்திலும் ஒருவருக்கொருவர் கலாய்த்து கொண்டு மிகவும் எதார்த்தமாக பழகி வருபவர்கள். பொதுவாக வெங்கட் பிரபு கலந்து கொள்ளும் விழா மேடைகளில் நடிகர் பிரேம்ஜிக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி தான் முதலில் கேட்கப்படும். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர் பிரேம்ஜி சமூக வலைதளங்களில் தனக்கு இந்த வருடத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் முதலில் நம்பவில்லை. 44 வயதான பிரேம்ஜி தற்போது வரை முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருவதால் அந்த தகவல் மிகவும் பொய்யானது என்று நம்பினார்.

இந்த நிலையில் நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட டுவிட் பதிவு உண்மை என்ற தகவல் வெளியாகி உள்ளது. திருமணமே வேண்டாம் என சிங்கிள் லைப்பில் மிக ஜாலியாக வாழ்ந்து வந்த பிரேம்ஜி கடந்த சில மாதங்களாக காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தை மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் நடிகர் பிரேம்ஜியை திருமணம் செய்து கொள்ளும் மணப்பெண் குறித்த அப்டேட்களும் கிடைத்துள்ளது. கடந்த வருடத்திற்கு முன்னதாகவே நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரன் தீவிரமாக பெண் தேடும் விஷயத்தில் இறங்கி உள்ளார். ஆனால் அதற்கு முன்னதாகவே நடிகர் பிரேம்ஜி காதலித்து வருவது தற்பொழுது உறுதியாகி உள்ளது.

தம்பி விஜய் படத்தை போடுங்க என ஷாக் கொடுத்த தல அஜித்! அப்படி என்ன நடந்திருக்கும்?

இறுதியாக வினிதா எனும் பின்னணி பாடகியை நடிகர் பிரேம்ஜி காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கு மேலாக காதலுடன் பழகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களுக்கு இடையே தை மாதம் திருமணம் நடக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதே நேரத்தில் பின்னணி பாடகி வினிதாவிற்கு 22 வயதாகும் நிலையில் 44 வயதான பிரேம்ஜியை காதலித்து திருமணம் செய்ய உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில ரசிகர்கள் உண்மையான காதலுக்கு கண்ணும் இல்லை, வயசும் இல்லை எனவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு நடிகர் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.