மும்பையில் ஐஸ்வர்யா ராய் கார் விபத்துக்குள்ளானதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

  மும்பையில் நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கடைசியாக ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தில் நடித்தார்.…

aishwarya rai

 

மும்பையில் நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கடைசியாக ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு மிகச் சிறந்த பாராட்டுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராயின் கார் மும்பையில் உள்ள முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த காரின் பின்புறத்தில் பேருந்து மோதியதாகவும் பாலிவுட் திரை உலகின் முன்னணி சினிமா இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்து நேர்ந்த போது, காரில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் இல்லை. பாதுகாவலர்கள் மட்டும்தான் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பேருந்து காரின் பின்புறத்தில் மோதியதாகவும், காருக்கு எந்தவிதமான பெரிய சேதமும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாவலர்கள் விபத்து குறித்து பேருந்து டிரைவருடன் வாதம் செய்த பின்னர், அந்த இடத்தை விட்டு புறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், மும்பை காவல்துறை இந்த செய்தியை மறுத்துள்ளது. பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டிருந்தது, ஐஸ்வர்யா ராய் பாதுகாவலர் காரில் இருந்து கீழே இறங்கி, “எதற்காக ஹாரன் அடிக்கிறார்கள்?” என்று கேட்டதாகவும், விபத்து எதுவும் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனால், ஐஸ்வர்யா ராய் விபத்துக்குள்ளானாரா? இல்லையா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. “ஐஸ்வர்யா ராய்க்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தால்,  கடவுளுக்கு நன்றி” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து, ஐஸ்வர்யா விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.