துருவ் விக்ரமுடன் “Bison” படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக இந்த நடிகரை வைத்து தான் இயக்கப் போகிறேன்… மாரி செல்வராஜ் பேட்டி…

By Meena

Published:

மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 2006 ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்த மாரி செல்வராஜ் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். கற்றது தமிழ், தங்க மீன்கள் மற்றும் தரமணி ஆகிய திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார் மாரிசெல்வராஜ்.

2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். தனது முதல் படத்தின் மூலமாக நல்ல விமர்சனங்களை பெற்று மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார் மாரி செல்வராஜ். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினர். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

அடுத்ததாக 2023 ஆம் ஆண்டு வடிவேலு, உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் பாராட்டுகளை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது வாழை என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார் மாரி செல்வராஜ். திரை பிரபலங்கள் முதல் நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் வரை அனைவரும் இந்தப் படத்தை பார்த்து இந்த வருடத்தின் சிறந்த படம் வாழை என்று புகழ்ந்து வருகின்றனர்.

வாழை திரைப்படத்தை தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தை பார்த்த அனைவரும் இறுதியில் கண்ணீர் விட்டு அழுது கொண்டு திரையரங்கில் இருந்து வெளிவந்த காட்சிகளையும் நாம் பார்த்திருப்போம். அப்படி ஆகச் சிறந்த படைப்பாளியாக மாரி செல்வராஜ் இருந்து வருகிறார்.

தற்போது பத்திரிகையாளர்களின் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் தனது அடுத்தடுத்த படங்களை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் வாழை திரைப்படத்திற்கு பிறகு துருவ் விக்ரமை வைத்து பைசன் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். அது முடியும் தருவாயில் உள்ளது. அந்த படம் வெளிவந்த பிறகு அடுத்ததாக மறுபடியும் நடிகர் தனுஷ் உடன் இணைந்து ஒரு படம் இயக்க இருக்கிறேன் என்று அப்டேட்டை கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.

மேலும் உங்களுக்காக...