12 வயதில் நடிப்பு.. கல்லூரி தாளாளருடன் திருமணம்.. ஒய் விஜயாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள்..!

Published:

12 வயதில் நடிக்க வந்து அதன் பிறகு பல திரைப்படங்களில் காமெடி, குணச்சித்திரம் மற்றும் வில்லி கேரக்டரில் நடித்த ஒய்.விஜயாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஒய்.விஜயா ஆந்திராவைச் சேர்ந்தவர். கடப்பாவில் அவருடைய தந்தை பணியாற்றியதால் அங்கு அவர் பள்ளி படிப்பை முடித்தார். அதன் பிறகு அவருடைய தந்தை மாற்றலாகி சென்ற இடத்திற்கெல்லாம் அவரது குடும்பம் சென்று கொண்டிருந்தது.

தமிழில் முதல்முறையாக ஒரு கல்லூரி கதை.. ஒரு தலை ராகம் படத்தின் வெற்றிக்கதை..!

y vijaya 3

ஒய்.விஜயாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். ஐந்து சகோதரிகள் மற்றும் நான்கு சகோதரர்கள். ஒய்.விஜயா சிறு வயதிலேயே நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் அவரை நடன பள்ளியில் அவரது பெற்றோர்கள் சேர்த்தனர். முறைப்படி நடனம் பயின்றவர் ஒய்.விஜயா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் ஒய்.விஜயா தனது 12வது வயதில் பள்ளியில் நடந்த நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது தெலுங்கு இயக்குனர் ஒருவர் அவரை பார்த்து தன்னுடைய படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடிக்க வைத்தார். அந்த படம் மூலம் அவர் பிரபலமாகவில்லை என்றாலும், என்டி ராமராவ், ஜெயலலிதா நடித்த ’ஸ்ரீ கிருஷ்ண சத்யா’ என்ற திரைப்படத்தில் அவருக்கு முக்கிய கேரக்டர் கிடைத்தது. அந்த படம் தான் ஒய் விஜயா யார் என்பதை வெளியே தெரிய வைத்தது.

அதன் பின்னர் தெலுங்கில் அவர் பல திரைப்படங்கள் நடித்தார். என்டி ராமராவ், நாகேஸ்வர ராவ் உட்பட பிரபலங்களுடன் நடித்தார். தமிழில் 1974ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ நடித்த ’வாணி ராணி’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.

முதல் ஒரு வாரம் காத்தாடிய தியேட்டர்.. அதன்பின் 200 நாள் ஓடி சாதனை.. பயணங்கள் முடிவதில்லை படத்தின் வெற்றிக்கதை..!

y vijaya4

ஆனால் ஒய்.விஜயாவுக்கு கே.பாலசந்தரின் மன்மத லீலை என்ற படம்தான் அவரை யார் என்பதை தமிழ் ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டியது. அந்த படத்தில் ராங் நம்பர் என்ற கேரக்டரில் நடித்திருந்த அவரை பல வருடங்கள் ராங் நம்பர் ஒய்.விஜயா என்றே ரசிகர்கள் அழைத்தனர்.

அதன் பிறகு பாலச்சந்தரின் ’மூன்று முடிச்சு’ உள்பட பல படங்களில் நடித்தார். குணச்சித்திர, வில்லி கேரக்டர், ஒரு பாடலுக்கு நடனம் உள்பட பல திரைப்படங்களில் அவர் நடித்தார். குறிப்பாக கமல்ஹாசன் நடித்த ’காக்கிச் சட்டை’ திரைப்படத்தில் ’நம்ம சிங்காரி சரக்கு’ என்ற பாடலுக்கு அபாரமாக டான்ஸ் ஆடி இருப்பார். அவரது நடனத்தை பார்த்து கமல்ஹாசனே பாராட்டி இருந்தார்.

நடிகை ஒய்.விஜயா கடந்த 1985 ஆம் ஆண்டு கல்லூரி தாளாளர் அமலநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவரே அந்த கல்லூரியில் பணிபுரியவும் செய்தார் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு அனுஷியா என்ற மகள் உண்டு. கடந்த 2013 ஆம் ஆண்டு அனுஷியாவுக்கு சிறப்பாக திருமணம் நடந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்த ஒய்.விஜயா ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ’சின்ன பாப்பா பெரிய பாப்பா’ மற்றும் ’கல்கி’ ஆகிய தொடர்களில் நடித்தார்.

ஐபிஎஸ் கனவு.. ஆளுநர் மாளிகையில் வேலை.. ஏவிஎம் ராஜனின் வாழ்க்கையை திருப்பி போட்ட நிகழ்வு..!

கடந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட அவர் சன் டிவியில் ஒளிபரப்பான ’மின்னலே’ என்ற தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போதும் அவர் தனக்கேற்ற கேரக்டர் வந்தால் மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...