ஸ்வாசிகா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்கும் பிரபலமான நடிகை ஆவார். இவரது இயற்பெயர் பூஜா விஜய் என்பதாகும். மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி பிரபலமானவர் ஸ்வாசிகா.
2009 ஆம் ஆண்டு வைகை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்வாசிகா. அதைத் தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, அப்புச்சி கிராமம் ஆகிய திரைப்படங்களில் இரண்டாம் நடிகையாக நடித்து பிரபலமானவர் ஸ்வாசிகா. இது மட்டுமில்லாமல் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். ஆனாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு சரியாக எந்த ஒரு கதாபாத்திரமும் அமையவில்லை.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்திருப்பார். இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் ஸ்வாசிகா. அந்த வகையில் சூரி நடித்த மாமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்துள்ளார். இந்த படம் அனைவரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை ஸ்வாசிகா தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் தான் கடந்து வந்ததை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், நான் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடித்த படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை. அப்போதெல்லாம் மிகவும் விரக்தியான மனநிலையில் இருப்பேன். யாரிடமும் பேச பிடிக்காது. என்னுடன் படித்த நண்பர்கள் எல்லோரும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்கள்.
ஆனால் நான் எதுவுமே செய்யவில்லை. எல்லோரும் என்னை ஏளனமாக பேசினார்கள். ஆனாலும் நான் எதையும் மனதில் நினைக்கவில்லை. சினிமாவில் தான் தொடர வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருந்தேன். பல ஆடிஷன்களுக்கு சென்றேன், பல இடங்களில் ஏறி இறங்கினேன். ஆனால் லப்பர் வந்து படம் மூலமாக இவ்வளவு வரவேற்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அந்த படத்தில் கொஞ்சம் வயது அதிகமான தோற்றம் என்றாலும் சும்மா இருக்கிறதற்கு ஏதாவது பண்ணலாம் என்று ஒத்துக்கொண்டேன்.அந்த படத்தின் கதையைக் கேட்டபோதே என்னால் இதை நன்றாக செய்ய முடியும் என்ற ஒரு நம்பிக்கை என்னுள் வந்தது என்று உருக்கமாக பேசியிருக்கிறார் ஸ்வாசிகா.