தமிழ் சினிமாவின் முதல் வசூல் சாதனைப் படம் என்ற பெருமையைப் பெற்ற படம்தான் உலகம் சுற்றும் வாலிபன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரே, இயக்கி நடித்து திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளி விழா கொண்டாடிய படம். இப்படி பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆன இந்தப் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர் முதலில் அணுகியது நடிகை ராஜஸ்ரீயைத் தானாம். ஆனால் அவர் இதை நிராகரித்திருக்கிறார்.
ஆந்திராவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீ தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் கலை அரசி, அடிமைப் பெண், பட்டிக்காட்டு பொன்னையா, குடியிருந்த கோயில், நாளை நமதே உள்ளிட்ட படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் இத்தனை படங்களில் நடித்தவர் முக்கியப் படமான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்க மறுத்தது பற்றி அவர் ஒரு பேட்டியில் கூறும் போது,
“திடீரென்று ஒரு நாள் அவரிடம் இருந்து போன். எப்போதும் அவரிடம் ஒரு பழக்கம். போனில் பெயர் சொல்ல மாட்டார். ‘நான் தான்’ என்பார். குரலைக் கேட்டதுமே நமக்கு கை கால் உதறத் தொடங்கிவிடும். உலகம் சுற்றும் வாலிபன்னு ஒரு படம் பண்றேன். நல்ல கேரக்டர் இருக்கு நீ தான் பண்ணனும். அடுத்த மாசம் அமெரிக்காவுல ஷூட்டிங். ரெடியா இரு” என்றார்.
அப்பாவின் பேச்சை மீறி ஆரம்பித்த பிசினஸ்.. இன்று கோடிகளில் சம்பாதிக்கும் பிரபலத்தின் மகள்
வீட்டுல பேசிட்டு சொல்றேன்ணே என்றேன். அரைமணி நேரத்துல சொல்லு என்றார். அப்போது என் அம்மா பக்கவாதம் வந்து படுக்கையில் இருந்தார்கள். அமெரிக்கா என்றதும் அவங்களுக்கு பயம். ஷூட்டிங் நேரத்துல அவங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா, முகத்தைக் கூட பார்க்க முடியாதே என்று கவலை. வேண்டாம்னு மறுத்துட்டாங்க.
எம்.ஜி.ஆர். படம் என்பதால் எவ்வளவோ பேசிப் பார்த்தேன். டாக்டர் கூட எதுவும் சொல்றதுக்கில்ல என்றதால் வேறு வழி இல்லாமல் அந்த வாய்ப்பை ஏற்க முடியாமல் போனது. அதை எம்.ஜி.ஆரிடம் எப்படி சொல்வது என்று தயக்கம்.
ஏற்கெனவே இவ பாதியில ஓடிடுவான்னு கெட்ட பேரு. இந்த அழகுல, அவரே வாய்ப்பு கொடுத்து வர்லேனு சொன்னா… என்ன நினைப்பாரோனு தயங்கித் தயங்கி போன் செஞ்சேன். “அண்ணே… நான் வர்ல” என்றேன். “ஏன்?” என்றார் லேசான கோபத்துடன்.
“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல” என்று விஷயத்தை விளக்கினேன். அம்மா… என்றதும் அவர் குரலில் மாற்றம். “நீ மொதல்ல அம்மாவை கவனிச்சுக்கோ. அதான் முக்கியம். இந்த சான்ஸ் அப்புறம் கூட வரும். ஏதாவது உதவி தேவைன்னா தயங்காம கேளு” என்றார். இந்த மனசுதாங்க அவரை இவ்வளவு உயரத்தில் உட்கார வைத்திருக்கிறது.“ என்று கூறியுள்ளார்.