சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த நடிகை மேகா ஆகாஷ்… ஷாக் ஆன ரசிகர்கள்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…

Published:

நடிகை மேகா ஆகாஷ் ஐயங்கார் சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது பெற்றோர்கள் விளம்பரத் துறையில் பணியாற்றினர். அதன் மூலம் சினிமா வாய்ப்பு மேகா ஆகாஷுக்கு கிடைத்தது.

2014 ஆம் ஆண்டு ஒரு பக்க கதை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த மேகா ஆகாஷ். ஆனால் இப்படம் வெளிவர மிகவும் தாமதம் ஆனது. அதனால் 2018 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடித்து அறிமுகமானார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதே ஆண்டில் சிம்புவுடன் இணைந்து வந்த ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் பிரபலமானார் மேகா ஆகாஷ்.

அடுத்ததாக தனுசு உடன் இணைந்து என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்தார் மேகா ஆகாஷ். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு பேசப்படவில்லை. ஆனால் இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. இதற்கு பிறகு தான் இவர் ஆரம்பத்தில் நடித்த ஒரு பக்க கதை என்ற திரைப்படம் ஜீ5 வில் வெளியானது.

தொடர்ந்து சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, பூமராங் போன்ற திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகையாக வளர்ந்து வரும் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் மேகா ஆகாஷ். இந்நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி மேகா ஆகாஷ் தனது நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவுடன் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதை தனது insta பக்கத்தில் அறிவித்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக்காகி இருக்கின்றனர். இப்படி சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டாரே மேகா ஆகாஷ் என்று நொடிஷன்கள் பேசி வருகின்றனர். மேலும் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...