நல்லவேளை ரஜினி படத்துல நடிக்கல.. தப்பிச்சேன்.. நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகை கிரண்..!

Published:

முதல் படமாக ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அதற்கு ஓரிரு நாள் முன் விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானதை அடுத்து ரஜினி படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது. ஆனால் பின்னாளில் ‘நல்ல வேலை ரஜினி படத்தில் நடிக்கவில்லை’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் நடிகை கிரண்.

நடிகை கிரண் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றாலும் மும்பை கல்லூரியில் படித்து வளர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போது அவர் மாடலிங் செய்து கொண்டிருந்ததாகவும் ஹிந்தி பாப் ஆல்பத்தில் நடித்ததாகவும் கூறப்பட்டது.

14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!

இந்த நிலையில் 2001ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படம் ஒன்றில் அறிமுகமான அவர் அதே ஆண்டு தமிழில் ஏவிஎம் தயாரிப்பில் உருவான விக்ரம் நடித்த ஜெமினி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்திற்கு ஒரு வடநாட்டு பெண் கதைப்படி தேவை என்ற நிலையில் கிரணை பார்த்து ஒரு வீடியோ டெஸ்ட் எடுத்ததும் படக்குழுவினர் அனைவருக்கும் திருப்தி ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தில் அவரை நாயகியாக ஒப்பந்தமாக்கி அட்வான்ஸ் கொடுத்து விட்டனர்.

kiran

இந்த நிலையில் தான் அவருக்கு திடீரென ரஜினி நடித்த பாபா திரைப்படத்தில் நாயகியாக நடிக்க கிரணுக்கு வாய்ப்பு வந்தது. அவர் பாபா பட குழுவினர்களிடம் இரண்டு நாள் முன்புதான் ஜெமினி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அட்வான்ஸ் வாங்கினேன். இப்போது வந்து ரஜினி பட வாய்ப்பு கொடுக்கிறீர்கள், நான் வேண்டுமானால் ஏவிஎம் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்துவிடவா என்று கேட்டார்.

ஆனால் பாபா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா ஏவிஎம் நிறுவனத்தை பகைத்துக் கொள்ள விரும்பாமல் நீங்கள் ஏவிஎம் நிறுவனத்தின் படத்திலேயே நடியுங்கள், அந்த நிறுவனத்திடம் நீங்கள் அட்வான்ஸ் வாங்கிட்டு திருப்பி கொடுத்தால் நன்றாக இருக்காது என்று அறிவுரை கூறியுள்ளார். அதன் பிறகு பாபா படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க முடியவில்லை என்று கிரண் அதிருப்தியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் விக்ரம் நடித்த ஜெமினி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கிரண் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாபா திரைப்படத்தில் கிரண் நடித்திருக்க வேண்டிய வேடத்தில் மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

kiran 3

அதுமட்டுமின்றி மனிஷா கொய்ராலா பின்னாளில் ஒரு பேட்டியில் நான் செய்த பெரிய தப்பு பாபா படத்தில் நடித்தது தான் என்றும் அந்த படத்தில் தனது கேரக்டர் சரியாக வடிவமைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இதையெல்லாம் பார்த்து பின்னாளில் கிரண் ‘நல்ல வேலை நான் ரஜினி படத்தில் நடிக்கவில்லை, ஜெமினி படத்தில் நடித்தேன்’ என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

தமிழ் சினிமாவின் மரபை உடைத்த ‘விதி’.. இப்படி ஒரு கோர்ட் சீன் எந்த படத்திலும் இல்லை..!

ஜெமினி படத்தின் வெற்றியை அடுத்து அவர் அஜித்தின் வில்லன் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு கமல்ஹாசனுடன் அன்பே சிவம்,  அப்பாஸ் உடன் பரசுராம்,  சரத்குமாரின் அரசு, பிரசாந்துடன் வின்னர், விஜய்யின் திருமலை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். அதனை அடுத்து அவர் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் செய்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அவர் சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாக மாறினார்.

இதனை அடுத்து 2016ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு திரையுலகில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே அவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேட முயற்சி செய்தார். அவரது முயற்சி வீணானது.

இதனை அடுத்து அவர் தனியாக ஒரு செயலி தொடங்கியதாகவும் அந்த செயலியில் தன்னுடன் உரையாடுவதற்கு கட்டணம் நியமனம் செய்ததாகவும் கூறப்பட்டது. குறிப்பாக  தன்னுடன் வீடியோ காலில் அரை மணி நேரம் பேசுவதற்கு 30 ஆயிரம், கால் மணி நேரம் பேசுவதற்கு ரூபாய் 13 ஆயிரம் மற்றும் புகைப்படம், வீடியோக்கள் டவுன்லோட் செய்வதற்கு தனி கட்டணம் மற்றும் தனது செயலியை பயன்படுத்துவதற்கு 49 ரூபாய் கட்டணம் என அவரது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதற்கு ஒரு பக்கம் பெரும் வரவேற்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் பெரும் கண்டனங்கள் குவிந்தது. இளைஞர்களை தவறான பாதைக்கு அவர் கொண்டு செல்கிறார் என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். அவருடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை இப்படியா வெளிப்படையாக விற்பனை செய்வது என்றும் கண்டனங்கள் குவிந்தன.

கே.பாக்யராஜ் உடன் காதல்.. திருமணத்திற்கு பின் 28 வருடங்கள் நடிக்காமல் இருந்த பூர்ணிமா ஜெயராம்..!

ஆனால் கிரண் தரப்பிலிருந்து இதற்கு எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை. தற்போது கிரண் மும்பையில் வாழ்ந்து வருகிறார். சினிமா வாய்ப்பு இல்லாமல் வெறும் இன்ஸ்டாகிராமில் வரும் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...