சம்சாரம் அது மின்சாரம் கோதவரியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. விசுவின் பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோ, ஹீரோயின் அம்மாவாக நடித்துப் புகழ் பெற்றவர்தான் கமலா காமேஷ். ஏவிஎம் தயாரிப்பில், விசுவின் கதை வசனம், இயக்கத்தில் வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கோதாவரியாக அனைவரின் மனதிலும் நின்றிருப்பார் கமலா காமேஷ்.
விசுவுக்கு நல்ல மனைவியாக, ஏதும் பேசாத அமைதியான சாந்தமான, சற்றே சோகம் கலந்த குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க கமலா காமேஷை அடிச்சுக்க ஆளே கிடையாது என்னும் வகையில் பல கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.
சென்னையிலேயே பிறந்து வளர்ந்த கமலா காமேஷ் தென்னிந்திய மொழிப்படங்கள் அனைத்திலும் சுமார் 480க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எனினும் அவருக்குப் புகழ் வாங்கிக் கொடுத்த படங்கள் என்றால் அது சம்சாரம் அது மின்சாரம், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்கள் தான்.
அப்போதுள்ள முன்னணி இயக்குநர்கள் அனைவரின் படங்களிலும் கமலா காமேஷ் இல்லாத படங்களே கிடையாது என்னும் அளவிற்கு படு பிஸியாக நடித்தார். படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அனைத்திலுமே மனதில் நிற்கும் அளவிற்கு தன்னுடைய நடிப்பு முத்திரையைப் பதித்திருப்பார் கமலா காமேஷ்.
அன்றே 50 லட்சம் சம்பளம் கேட்ட கவுண்டமணி.. ஆடிப்போன ஏவிஎம்.. சைலண்டாக தட்டித் தூக்கிய வி.சேகர்
தற்போது சென்னையில் தனது மகளுடன் வசித்து வருகிறார். இவரது மகள் வேறுயாருமல்ல நடிகையும், தொகுப்பாளியுமான உமா ரியாஸ் தான். சினிமாவில் பார்ப்பதற்கே மிகவும் ஒல்லியான உடல்வாகு கொண்டு நடித்திருக்கும் கமலா காமேஷ்.-க்கு தற்போது 71 வயதாகிறது. அப்போது படங்களில் பார்த்ததைக் காட்டிலும் இப்போது மிக உற்சாகமாகப் பேசுகிறார்.
மேலும் உடலும் சற்று எடை கூடி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போயிருக்கும் கமலா காமேஷ்-க்கு சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடிக்கும் போது 38 வயது ஆனதாம். ஆனால் தன் சமகால வயதினரான ரகுவரனுக்கு அதில் அம்மாவாக நடித்திருப்பார்.
தற்போதும் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க அழைத்தால் செல்லத் தயாராக இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் கமலா காமேஷ்.