தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான வெள்ளை சுப்பையா என்பவர் 1000 நாடகங்கள் 500 திரைப்படங்கள் நடித்தும் இறுதி காலத்தில் தனக்கு வந்த புற்று நோய்க்கு சிகிச்சை செய்ய பணம் இல்லாமல் வறுமையில் வாடியதாக கூறப்பட்டது.
தமிழ் திரையுலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சுப்பையா கோவையை சேர்ந்தவர். இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் வீட்டில் இருந்து வெளியேறி சென்னைக்கு வந்தார். பல நாடக குழுவில் இவர் நடித்த நிலையில் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
பாசமலர் உட்பட ஒரு சில திரைப்படங்களில் அவர் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தாலும் அவருக்கு முதல் முதலாக மாணவன் என்ற திரைப்படத்தில் தான் சொல்லிக் கொள்ளும்படி வேடம் கிடைத்தது. இவர் நடிக்க வந்த காலத்தில் ஏற்கனவே சுப்பையா என்ற பெயரில் ஒரு சில நடிகர்கள் இருந்ததால் தன்னை வெள்ளை சுப்பையா என்று அவர் திரையில் அறிமுகப்படுத்தி கொண்டார்.
மாணவன் படத்தின் வெற்றியை அடுத்து அவர் கமல்ஹாசனின் உணர்ச்சிகள் மற்றும் 16 வயதினிலேயே ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை ஆகிய பாரதிராஜா இயக்கத்தில் உருவான படங்களில் நடித்த அவர், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான பயணங்கள் முடிவதில்லை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பின்னர் ஆர்.சுந்தர்ராஜன் இவருக்கு தனது படங்களில் தொடர்ந்து வாய்ப்பு அளித்தார்.
குறிப்பாக வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் மேகம் கருக்கையிலே என்ற பாடலுக்கு இவர் தான் நடனமாடி இருப்பார். மேலும் வெள்ளை சுப்பையா, காதல் ஓவியம், கோழி கூவுது, மனைவி சொல்லே மந்திரம், செந்தூரப்பூவே, தங்கமான தங்கச்சி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
சிவாஜியுடன் 5 கேரக்டரில் நடித்த ஒரே நடிகை.. யார் இந்த விஜயகுமாரி..?
திரைப்படங்களில் நடித்தாலும் இவர் இடையிடையே நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் மொத்தம் 1000 நாடகங்களில் நடித்துள்ளார். 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை அடுத்து அவர் சொந்த ஊரான கோவைக்கு சென்று விட்டார் என்றும் அங்கு குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. எப்போதாவது நடிகர் சங்க தேர்தல் வரும் போது மட்டும் சென்னைக்கு வந்து வாக்களித்து விட்டு செல்வார்.
இந்த நிலையில் திடீரென அவருக்கு புற்றுநோய் தொற்றிக் கொண்டதை அடுத்து சிகிச்சை செய்ய பணம் இல்லாமல் உதவிக்காக பலரிடம் கையேந்திதாகவும் ஆனால் உதவி கிடைக்காததால் சிகிச்சையை தொடர முடியாததால் அவர் காலமானதாகவும் கூறப்பட்டது.
3 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த லூஸ் மோகன்.. மெட்ராஸ் பாஷையில் கலக்கிய நடிகர்..!!
சென்னை தேனாம்பேட்டையில் வாய்ப்பு தேடி அலைந்தபோது, ஆர் சுந்தர்ராஜன், சங்கிலி முருகன், பெரிய கருப்பு தேவர், பாக்யராஜ் ஆகியோர் ஒரே இடத்தில் தங்கி இருந்த நிலையில் அவர்களுடன் தங்கியவர்களில் வெள்ளை சுப்பையாவும் ஒருவர். அதன் பிறகு ஒவ்வொருவருக்காக வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
நடிகர் வெள்ளை சுப்பையா கடைசியாக கடந்த 2009 ஆம் ஆண்டு கண்ணுக்குள்ளே என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு நல்ல திறமையான கலைஞர், கடைசி நேரத்தில் வறுமையின் காரணமாக கஷ்டப்பட்டு உயிரிழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.