சிவாஜியுடன் 5 கேரக்டரில் நடித்த ஒரே நடிகை.. யார் இந்த விஜயகுமாரி…?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அக்கா, தங்கை, முறைப்பெண், மனைவி, மகள் என ஐந்து உறவு முறைகளில் நடித்த ஒரே நடிகை என்றால் அது நடிகை விஜயகுமாரி தான். தமிழ் சினிமாவில் லட்சிய நடிகர் என்று கூறப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மனைவிதான் விஜயகுமாரி. இவர் சிறுவயதிலேயே திரைப்படங்களில் நடிக்க வந்து விட்டார்.

17 வயதில் நாவலர் என்ற திரைப்படத்தில் நடிக்க வந்த அவர், அதன் பிறகு பெற்ற மகளை விற்ற அன்னை, பதிபக்தி, வஞ்சிக்கோட்டை வாலிபன், கல்யாண பரிசு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். எம்ஜிஆர் படங்களிலும் சிவாஜி படங்களிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்தவர் ஜெமினி கணேசன், எஸ் எஸ் ஆர், முத்துராமன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சிவாஜிகணேசனுடன் விஜயகுமாரி நடித்தது தான் வரலாற்றுச் சாதனை. ஒரு நடிகருடன் ஒரு நடிகை ஒன்று அல்லது இரண்டு உறவு முறைகளில் நடித்து இருப்பார்கள். ஆனால் ஐந்து உறவு முறைகளான அக்கா, தங்கை, முறைப்பெண், மனைவி, மகள் என சிவாஜி கணேசனுடன் நடித்த ஒரே நடிகை விஜயகுமாரி தான் என்ற பெருமை அவருக்கு உண்டு. அது மட்டும் இன்றி இந்த ஐந்து படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள்.

தங்க சுரங்கம்: சிவாஜி கணேசன் நடித்த ஒரே ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி திரைக்கதை..!

vijayakumari

சிவாஜிகணேசன் நடிப்பில் முத்தா சீனிவாசன் இயக்கத்தில் கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அன்பை தேடி. இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக ஜெயலலிதா நடித்த நிலையில், சிவாஜியின் அக்கா வேடத்தில் விஜயகுமாரி நடித்தார். அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும்.

கடந்த 1971 ஆம் ஆண்டு மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் உருவான சவாலே சமாளி என்ற திரைப்படத்திலும் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருப்பார். இந்த படத்தில் சிவாஜி கணேசன் தங்கையாக விஜயகுமாரி நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக முத்துராமன் நடித்திருப்பார்.

கடந்த 1963 ஆம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவான திரைப்படம் குங்குமம். இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக சாரதா நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜயகுமாரி சிவாஜி கணேசனின் முறைப்பெண்ணாக நடித்திருப்பார்.

இந்த படத்தில் நடித்த ஒருவர் கூட மேக்கப் போட்டு நடிக்கவில்லை.. இப்படி ஒரு சிவாஜி கணேசன் படமா?

vijayakumari12

தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழன் என்ற படத்தில் சிவாஜி கணேசன், ராஜராஜ சோழன் என்ற கேரக்டரில் நடித்த நிலையில் அவரது மனைவியாக சோழமாதேவி என்ற கேரக்டரில் விஜயகுமாரி நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கடந்த 1963 ஆம் ஆண்டு வெளியான பீம்சிங் இயக்கத்தில் உருவான படம் பார் மகளே பார். இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக சவுகார் ஜானகி நடித்த நிலையில் சிவாஜியின் மகளாக விஜயகுமாரி நடித்திருப்பார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பிரபுவின் முதல் படமும் தோல்வி… 100வது படமும் தோல்வி… சிவாஜி கணேசன் தான் காரணமா?

மொத்தத்தில் சிவாஜி கணேசனின் அக்கா, தங்கை, முறைப்பெண், மனைவி, மகள் என்ற ஐந்து உறவு முறைகளில் நடித்த ஒரே நடிகை என்ற பெருமை தனக்கு உண்டு என்று விஜயகுமாரி பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...