பேயும் நானும் ஹிட் காம்போ…. குழந்தைங்களுக்கு ஜாலியான படம் டிடி ரிட்டர்ன்ஸ் கலகலக்கும்… சந்தானம்

Published:

நடிகர் சந்தானம் தமிழ்ப்படங்களில் காமெடியில் கவுண்டமணியின் நகைச்சுவையை நினைவூட்டுபவர். அடிக்கடி கவுண்டர் கொடுத்து காமெடி செய்வதில் வல்லவர். இவரது படங்களில் தற்போது கம்பேக்காக வந்து இருப்பது டிடி ரிட்டர்ன்ஸ். இந்தப் படத்தில் நடித்த போது அவரது அனுபவங்கள் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

Santhanam 2
Santhanam 2

இந்தப்படத்தைப் பொருத்த வரைக்கும் தயாரிப்பாளர் போட்ட துட்டு வெளிய வரணும். இதுக்குள்ள டேர் அண்ட் டிமாண்ட்ஸ்னு சப் டைட்டில் கொடுத்துருக்காங்க. அது இதுல இருக்கு.

பேயும் நானும் ஹிட் காம்போங்கறதை இப்போ தான் பர்ஸ்ட் டைம் நான் கேள்விப்படறேன். இந்த டீம் டைரக்டர் பிரேம் ஆனந்த் கிட்ட ஹாரர் காமெடி என்ன மாதிரி எல்லாம் பண்ணலாம்னு எழுதி எடுத்துட்டு வாங்கன்னு சொன்னேன். அவரு வந்து பேய்க்கு பிளாஷ்பேக், அது வந்து ரிவென்ச் எடுக்குறது, உடம்புல ஏறி பழி வாங்குறது, அதுக்கு மந்திரவாதி வர்றது இது எதுவுமே இருக்கக்கூடாது.

இது எல்லாமே பேய் படத்துல தான் இருக்கும். இது இல்லாம ப்ரஷ்ஷா இருந்தா சொல்லுங்க. நாம ட்ரை பண்ணுவோம். சோ அவரு இதுல வந்து கேம்.. அது இதுன்னு ஃபன்னான விஷயங்களைச் சொன்னாரு. பேய் படம்னா குழந்தைங்க கூட பயப்படாம வந்து பார்க்குறமாதிரி ஜாலியான படமா இருந்துச்சு. படத்தோட டிரெய்லர் ஆக்சன் சீக்வன்ஸ்க்குள்ள வந்துச்சு.

நானு, மொட்டை ராஜேந்திரன்லாம் வருவோம். அதுல கோஸ்ட் வந்து அடிச்ச உடனே கீழே விழுந்துருவேன். ஹீரோயினும் என் மேல சாஞ்சி விழுந்துருவாங்க. மொட்டை ராஜேந்திரன் அந்த சைடு போய் விழுந்துருவாரு.

அதுக்கு அப்புறமா அந்த கேமோட கைகாட்டி ரொட்டேட் ஆகி வந்துக்கிட்டு இருக்கும். அப்ப எழுந்து வந்துடலாம்னு டேக் எடுத்தோம். அதுக்கு அப்புறமா உட்கார்ந்து மூவ் பண்ணலாம். பயந்து அப்படியே தேய்ச்சிக்கிட்டு போற மாதிரி. அது ரொம்ப நல்லா வந்துச்சு. இது தியேட்டர்ல படமா பார்க்கும்போது ரொம்ப நல்லா இருக்கும். நல்ல ஒர்க் அவுட்டாச்சு.

இப்ப கிரிக்கெட் விளையாடுற தோனியே படம் எடுக்க வந்துட்டாரு. நாம ஏன் படத்துக்குள்ள கேம் விளையாடக்கூடாதுன்னு தான் யோசிச்சோம். ஆக்சுவலா குழந்தைங்களுக்குப் பிடிக்கிற மாதிரி ஒரு கான்செப்ட் பண்ணுங்கன்னு தான் டைரக்டர்க்கிட்ட சொன்னேன்.

பேய்க்கும் நமக்கும் கேம் வச்சி விளையாடலாம். அதுல வாழணும்… இல்ல சாகணும். அதுதான் கேம். அப்படின்னு யோசிக்கும் போது அதுல நிறைய காமெடி கிடைச்சது. ஓடறது, கதவு இடிக்கிறது, தடுக்கி விழுறதுன்னு… டயலாக்கை விட இந்த ஸ்லாப்ஸ்டிக் காமெடி ரொம்ப நல்லா இருக்கும்.

DD returns 1
DD returns 1

அதுக்கு பயங்கரமா செட் எல்லாம் போட்டோம். அதுக்குள்ள தான் விளையாண்டோம். அதுல எங்களுக்குள்ளேயே எங்கே இருக்குறோம்னு தெரியாது. டோர் செட் எல்லாம் போட்டோம். அந்த இன்ட்ரஸ்டிங்கான கன்டென்ட் இதுல கிடைச்சதனால தான் இந்த படத்தையே பண்ணினோம்.

பேயின்னா பயம் இல்ல. பிரண்ட்லியாக்கி பெசண்ட் நகர்லாம் கூட்டிட்டுப் போவேன் நைட். (சிரிக்கிறார்) பேய்னா எல்லாருக்கும் பயம் தான். எனக்கு ரொம்ப பயம். ஆனா நாம பயப்படுற விஷயம்.. ஒரு எக்சைட்மெண்டான விஷயத்தை நாம பண்ணும்போது நமக்கு ஒரு சந்தோஷம் வரும் தெரியுங்களா…?

ஆக்சுவலா இந்தப் பேய்படத்தை ஹைதராபாத்லாம் போய் சூட் பண்ணும்போது நைட்ல காஸ்டியூமர்ஸ், மேக் அப் அசிஸ்டண்ட்ஸ்லாம் புதுப்புது பேய்க்கதை சொல்வாங்க.

டோர் திறந்து யாரோ எட்டிப் பார்த்தாங்க… அப்புறம் போய் பார்த்தேன் காணோம்… மல்லிப்பூ வாசம் வந்துச்சு… ஆனா யாரையும் காணோம். இப்படி ஒரு எக்சைட்மெண்டான விஷயம் இருக்கறதால பேயோட படம் பண்றது எனக்கு ஒரு ஜாலியான விஷயமா இருந்துச்சு.

சந்தானம் இதற்கு முன் நடித்த ராஜ்மஹால், தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களும் ஹாரர் மூவீஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இவர் நடித்த படம் தான் டிடி ரிட்டர்ன்ஸ்.

 

 

 

 

மேலும் உங்களுக்காக...