வாழ்நாள் முழுக்க ஒரு குறையாகவே இருக்கும்.. விஜயகாந்த் நினைவிடத்தில் கண் கலங்கிய கார்த்தி…

Published:

2023-ன் கடைசியில் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு கேப்டன் விஜயகாந்த் மரணம். சாதி, மதம், அரசியல் பார்க்காமல் ஒட்டு மொத்த தமிழகமே உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் சிந்திய தருணம் அது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதிக்கு அடுத்த படியாக மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

தீவுத் திடலில் வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர், ஆளுநர், எதிர்கட்சித் தலைவர், மாற்றுக் கட்சியினர், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி இறுதியில் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினமும் ஏராளமனோர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க முடியாமல் வெளிநாடுகளில் இருந்த திரையுலகினர் தாயகம் திரும்பி தற்போது கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கேப்டன் விஜயகாந்துக்கு நடிகர் சிவக்குமார் மற்றும் கார்த்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ஏற்கனவே நடிகர் சூர்யா வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்துக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்திய வீடியோவினைப் பகிர்ந்தார். இதனையடுத்து தற்போது தற்போது கார்த்தி தனது தந்தையுடன் கேப்டனுக்கு அவர் சமாதியில் மலர் வளையம் வைத்து தீபாராதனை காட்டி அஞ்சலி செலுத்தினார்.

அஜித் போன் பண்ணியே பேசல!.. விஜயகாந்தை மறந்துட்டு வெளிநாட்டில் குத்தாட்டம்!

அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கேப்டன் என்ற பெரிய ஆளுமை நம்முடன் இல்லை என்பது பெரிய வருத்தமாக இருக்கிறது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார். தானே களத்தில் இறங்கி பணியாற்றியவர். இறுதி அஞ்சலியில் அவருடைய முகத்தை காணாதது என் வாழ்வில் ஒரு பெரும் குறையாகவே இருக்கும்.

வருகிற 19-ம் தேதி நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு செய்ய வேண்டியது, அரசுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கோரிக்கைகள் போன்றவை தெரிவிக்கப்படும். அவருடைய இரக்க குணமும், அன்பும் தமிழகம் முழுக்க எப்போதும் பரவி இருக்க வேண்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்“ என்று அந்தப் பேட்டியில் கண் கலங்க கார்த்தி கூறினார்.

மேலும் உங்களுக்காக...