அஜித் போன் பண்ணியே பேசல!.. விஜயகாந்தை மறந்துட்டு வெளிநாட்டில் குத்தாட்டம்!

நடிகர் அஜித் தனது மகளின் பிறந்தநாளை நடுக்கடலில் சொகுசு கப்பலில் துபாயில் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. டிசம்பர் மாதம் சென்னை திரும்பிய நடிகர் அஜித் மீண்டும் படப்பிடிப்பிற்க்காக அஜர்பைஜான் சென்றிருந்தார் தற்போது அப்படத்தின் ஒய்வு நேரத்தை தன் குடும்பத்துடன் கொண்டாடிவருகிறார்.

தமிழ் திரையுளகில் நடிகர் அஜித் முண்ணனி இடத்தில் இருந்தாலும் ,சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் எந்த கணக்கும் ஈடுபாடும் இவருக்கு இல்லை. சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை வாழ்கிறார். நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்து தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தவில்லை:

நடிகர் விஜயகாந்த் இறப்பிற்கு அஜித் வரவில்லை என்றாலும் போனில் தொடர்பு கொண்டு விஜயகாந்த் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது அதெல்லாம் சுத்தப் பொய் என வலைப்பேச்சு அந்தணன் பகீர் கிளப்பி உள்ளார்.

அஜித்தின் 62ஆவது படமாக விடாமுயற்சி உருவாகி வருகிறது. முன்னதாக ஏகே 62வை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் சில காரணங்களால் அவர் வெளியேறினார் . பின்னர் மகிழ் திருமேனி அப்படத்தின் இயக்குனரானார். அஜித்தின் பிறந்தநாள் அன்று படத்துக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

துபாயில் குடும்பத்துடன் ஜாலி:

இப்போது அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துவருகிறார். மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. தற்போது அஜித் தன் குடும்பத்துடன் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், நடிகர் அஜித் வெளிநாட்டுப் பெண்ணுடன் அவரது கையை பிடித்துக் கொண்டு ஆட்டம் போடுவதை பார்த்த விஜய் ரசிகர்கள் விஜயகாந்த் மறைவுக்கு வந்து அஞ்சலி செலுத்தாமல் அஜித் எப்படி குத்தாட்டம் போடுகிறார் பாருங்க என கலாய்த்து வருகின்றனர்.

தற்போது அவர் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் கிடைத்த ஓய்வு நேரத்தை தனது குடும்பத்தாருடன் செலவிட்டுவருகிறார். துபாய்க்கு ஷாலினி, அனோஷ்கா, ஆத்விக் உள்ளிட்டோர் அஜித்துடன் சென்றிருக்கின்றனர். அங்கே சொகுசு படகில் அஜித் குடும்பத்துடன் சென்றதை பார்த்த அங்கிருந்த தமிழ் ரசிகர்கள், தல தல என்று அழைத்தார்கள். அஜித் அவர்களை திரும்பி பார்த்து கையசைத்துவிட்டு சென்ற விடியோ இணையதலத்தில் வைரலாகி வருகிறது. அவர் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டும் ரசிகர்கள் அழைத்தவுடன் மதித்து கையசைத்துள்ளார். இது அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கு இடையே உள்ள அன்பை வெளிப்படுத்துகிறது.

விஜயகாந்த் மறைவுக்கு வரவும் இல்லை அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளத்தில் ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிட நேரமில்லாமல் கொண்டாட்ட மூடில் இருக்கிறார் அஜித் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.