500 படங்கள்.. 4 தலைமுறை நடிகர்களுடன் நடிப்பு.. பஞ்சாயத்து தலைவர்.. நடிகர் கரிக்கோல் ராஜு திரைப்பயணம்..!

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகில் பல திறமையான நடிகர்களை திரையில் பார்த்திருப்போம். அவர்களின் நடிப்பையும் ரசித்திருப்போம். ஆனால் அவர்களின் பெயர் தெரிந்திருக்காது, அவர்கள் எந்தெந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்திருக்காது. அந்த வகையில் உள்ள பல நடிகர்களில் ஒருவர்தான் கரிக்கோல் ராஜு.

நடிகர் கரிக்கோல் ராஜு தமிழ் திரை உலகில் மட்டும் சுமார் 500 மடங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்களில் அவர் கிராமத்துக் கேரக்டரில் நடித்திருப்பார். குறிப்பாக பஞ்சாயத்து தலைவர் கேரக்டரில் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.

கவுண்டமணி – செந்தில் காமெடிக்கு காரணமானவர்.. சிவாஜியின் நெருங்கிய நண்பர்.. யார் இந்த ஏ.வீரப்பன்..!

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், பாக்யராஜ், அர்ஜுன், கார்த்திக், பிரபு என 5 தலைமுறை நடிகர்களுடன் கரிக்கோல் ராஜு நடித்துள்ளார். பஞ்சாயத்து தலைவர் வேடம் ஒரு படத்தில் வந்தால் உடனே கூப்பிடு கரிக்கோல் ராஜூவை என்று கூறும் அளவிற்கு அவர் அந்த கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தார்.

கடந்த 1951-ம் ஆண்டு ‘சுதர்சனம்’ என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படம் அவருக்கு கிராமத்து வேடமாக கிடைத்தது. இதனையடுத்து அவர் திருமணம், பதி பக்தி, தாய் மகளுக்கு கட்டிய தாலி உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். 1960களில் அவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. பாத காணிக்கை என்ற படத்தில் ஒரு கிராமத்து நபராகவும், பணத்தோட்டம் படத்தில் சிறை கைதியாகவும், ஆண்டவன் கட்டளை, சித்தி, மகாகவி காளிதாஸ், காவல்காரன், கண்ணன் என் காதலன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் திருமண தரகராக நடித்திருப்பார். டிஎஸ் பாலையாவின் மகள்களுக்கு மாப்பிளை பார்க்கும் தரகராக நடித்து, பாலையாவிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் கேரக்டரில் அசத்தலாக நடித்திருப்பார்.

விகே ராமசாமி ஹீரோவாக நடித்த படம்.. எம்ஜிஆர்-சிவாஜி படங்களுக்கு இணையாக வசூல்..!

1970களிலும் அதிகமான படங்கள் நடித்த கரிக்கோல் ராஜு, 1980களில் வயது முதிர்வு காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும் ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் அவருடைய கேரக்டர் அசத்தலாக இருக்கும். இந்த படத்திலும் ஒரு கிராமத்து நபராக நடித்திருப்பார். இதனை அடுத்து இரட்டை மன்னன், கோழி கூவுது, கீதாஞ்சலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் கரிக்கோல் ராஜ் நடித்த கடைசி திரைப்படம் ‘நாடு அதை நாடு’. இதில் ராமராஜன் நாயகனாக நடித்திருப்பார்.

500 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் கரிக்கோல் ராஜுவின் நடிப்பு திறமையை பல இயக்குனர்கள் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதும் ரசிகர்கள் மனதிலும் இடம் பெற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

7500 நாடகங்கள்.. பல திரைப்படங்கள்.. நடிகர் காத்தாடி ராமமூர்த்தியின் கலையுலக பயணம்..!

குணச்சித்திர கேரக்டர், வில்லன் கேரக்டர் மற்றும் நகைச்சுவை கேரக்டரில் நடித்த இவர் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றதாகவும் ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை என்றும் அவர் என்ன ஆனார் என்று இன்றுவரை மர்மமாக இருப்பதாகவும் கூறப்படுவது உண்டு.