சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம் பார்க்கும் தந்திரம்.. நடிப்பு மற்றும் இயக்கத்தில் கலக்கிய டிபி கஜேந்திரன் இந்த நடிகையோட உறவினரா?

Published:

நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்து வெற்றி அல்லது தோல்வி படும் எடுக்கும் பிரபல இயக்குனர்கள் மத்தியில் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் பெரிய லாபம் தரும் படங்களை இயக்கி சாதனை புரிந்த இயக்குனர்களில் ஒருவர் தான் டிபி கஜேந்திரன்.

கே பாலச்சந்தர் மற்றும் விசு ஆகியோர்களின் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து அந்த அனுபவத்தின் மூலமாக ’வீடு மனைவி மக்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் விசு மற்றும் கே ஆர் விஜயா முக்கிய கேரக்டர்களிலும் பாண்டியன், சீதா நாயகன், நாயகிகளாகவும் நடித்தனர். இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதன் பிறகு அவர் பல படங்களை இயக்கினார்.

எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், எங்க ஊரு மாப்பிள்ளை, நல்ல காலம் பொறந்தாச்சு, பாட்டு வாத்தியார், பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட படங்களை இயக்கினார். அதன் பிறகு பிரபு நடித்த பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவன் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

மேலும் அவர் விசு இயக்கத்தில் உருவான சிதம்பர ரகசியம் என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பிறகு அவர் புதிய சகாப்தம், அவள் சுமங்கலி தான், காவலன் அவன் கோவலன், வீடு மனைவி மக்கள், அண்ணன் என்னடா தம்பி என்னடா, பிரியமுடன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பெரும்பாலும் அவர் காமெடி கேரக்டரில் தான் நடிப்பார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் சினிமா தொழில்நுட்ப கலைஞர்களின் சங்கத்தில் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் நடிப்பு, இயக்கம் என மாறி மாறி திரையுலகில் தனது பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருந்த டிபி கஜேந்திரன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 68 வது வயதில் திடீரென காலமாகிவிட்டார்.

இயக்குனர் டிபி கஜேந்திரன் சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபமுள்ள படத்தை இயக்குவது எப்படி என்ற ஃபார்முலாவை கையில் வைத்திருந்தார். ராமநாராயணனை அடுத்து மிகவும் குறைவான பட்ஜெட்டில் வெற்றி படங்களை இயக்கியது இவர் தான். தற்போதைய பெரிய பட்ஜெட் படங்களை இயக்கும் இயக்குனர்கள் டிபி கஜேந்திரன் பாணியில் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் கிடைக்கும் படங்களை இயக்கும் ஃபார்முலாவை பின்பற்றினால் திரை உலகம் செழிப்பாக இருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

டிபி கஜேந்திரன் 15 படங்களுக்கு மேல் இயக்கி உள்ள நிலையில் 100 படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். அத்துடன் இவர் தமிழ் திரை உலகின் பழம்பெரும் காமெடி நடிகை டிபி முத்துலட்சுமியின் நெருங்கிய உறவினர் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.

மேலும் உங்களுக்காக...