பாசமலர் படத்தை தயாரித்தது சந்தான பாரதி அப்பாவா..? ஹிட் பட இயக்குனரின் தெரியாத தகவல்கள்..!!

By Bala Siva

Published:

அண்ணன், தங்கை பாச மழை பொழியும் கதை என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த ‘பாசமலர்’ திரைப்படம்தான். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தை பீம்சிங் இயக்கியிருந்தார். ஆனால் இந்த படத்தை தயாரித்தது தற்போதைய நடிகர் மற்றும் இயக்குனர் சந்தான பாரதியின் அப்பா சந்தானம் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

நடிகர் சந்தான பாரதி சிறுவயதிலேயே திரை உலகில் நுழைந்துவிட்டார். அவர் ஆரம்ப காலகட்டத்தில் உதவி இயக்குனராக நுழைந்து ஒரு சில படங்களில் பணிபுரிந்தார். அதுமட்டுமின்றி அவர் டைட்டில் டிசைன்களையும் செய்து கொடுப்பார். எம்ஜிஆர், சிவாஜி நடித்த பல படங்களுக்கு டைட்டில் டிசைன் செய்து கொடுத்துள்ளார்.

கமல், ரஜினி நடிக்க வேண்டிய படம்.. இலவசமாக இசையமைத்த இளையராஜா.. பன்னீர் புஷ்பங்கள் படத்தின் சொல்லப்படாத கதை..!

இதனையடுத்து ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அப்போதுதான் அவருக்கு கமல்ஹாசனுடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் ஸ்ரீதரிடம் இன்னொரு உதவி இயக்குனராக இருந்தவர் பிரபல மேக்கப் மேன் பீதாம்பரம் அவர்களின் மகன் வாசு. சந்தான பாரதி மற்றும் வாசு இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்துதான் இருவரும் இணைந்து ஒரு சில திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தனர்.

santhana bharathi1

முதன்முதலாக இந்த இரட்டையர்கள் பாரதி – வாசு என்ற பெயரில் இயக்கிய திரைப்படம் ‘பன்னீர் புஷ்பங்கள்’. இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில்தான் சுரேஷ் அறிமுகமானார். இதன் பிறகு ‘மது மலர்’, ‘மெல்ல பேசுங்கள்’ ‘நீதியின் நிழல்’ உள்ளிட்ட ஒரு சில பல படங்களை இயக்கினார்கள்.

அதன் பிறகு இருவரும் தனித்தனியே பணிபுரிய முடிவு செய்து பிரிந்தனர். இதனையடுத்துதான் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவான ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்ற திரைப்படத்தை சந்தன பாரதி இயக்கினார். அதன் பிறகு சிவாஜியின் ஒரே ஒரு அரசியல் படமான ‘என் தமிழ் என் மக்கள்’, பிரபு நடித்த ‘பூவிழி ராஜா’, ‘காவலுக்கு கெட்டிக்காரன்’, கமல்ஹாசன் நடித்த ‘குணா’, பிரபு நடித்த ‘சின்ன மாப்பிள்ளை’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கினார்.

ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல.. 17 முறை ஒரே நாளில் வெளியான சிவாஜியின் இரண்டு படங்கள்.. பெரும் சாதனை..!

santhana bharathi21

சந்தான பாரதி இயக்கத்தில் உருவான மறக்க முடியாத படம் என்றால் அது ‘மகாநதி’ திரைப்படம் தான். கமல்ஹாசன், சுகன்யா நடித்த இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்றது. அதன் பிறகு ‘வியட்நாம் வீடு’, ‘எங்கிருந்தோ வந்தான்’ ஆகிய படங்களை சந்தான பாரதி இயக்கினார்.

கமல் – ரஜினி வேண்டவே வேண்டாம்.. ஸ்ரீதர் மறுப்பு.. சமாதானம் செய்த உதவியாளர்கள்.. இளமை ஊஞ்சலாடுகிறது உருவான கதை..!

அதுமட்டுமின்றி இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான இவர், பல கமல்ஹாசன் படங்களிலும், மற்ற படங்களிலும் நடித்தார். சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் கூட ஏஜென்ட் உப்பிலியப்பன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது கூட அவர் ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறார்.