கமல், ரஜினி நடிக்க வேண்டிய படம்.. இலவசமாக இசையமைத்த இளையராஜா.. பன்னீர் புஷ்பங்கள் படத்தின் சொல்லப்படாத கதை..!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் நடித்திருக்க வேண்டிய படம், ஆனால் இருவருமே பிசியாக இருந்து கால்ஷீட் கொடுக்க முடியாததால் புதுமுக நடிகரான சுரேஷ் அறிமுகமான படம் ‘பன்னீர் புஷ்பங்கள்’. இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிரதாப் நடித்துள்ளார்.

கடந்த 1981ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக இருந்த சந்தான பாரதி மற்றும் பி.வாசு ஆகிய இருவரும் இணைந்து இயக்கிய முதல் திரைப்படம்தான் பன்னீர் புஷ்பங்கள்.

ரஜினிக்கு இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தும் வாய்ப்பு கிடைக்காதது ஏன்? தேவாவின் இசை வாழ்க்கை..!

ஸ்ரீதரிடம் உதவி இயக்குனர்களாக இருக்கும்போதே ரஜினி, கமல் இருவரிடம் நல்ல நட்புடன் இருந்தவர்கள் சந்தான பாரதி – பி. வாசு. இவர்கள் தனியாக படம் இயக்கப் போகிறோம் என்று ரஜினி மற்றும் கமலிடம் கூற இருவருமே நடிக்க ஒப்புக்கொண்டனர்.

panneer pushpangal3

ஆனால் அடுத்தடுத்து இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியானதால் பாரதி – வாசு ஆகிய இருவருக்கும் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தனது வருத்தத்தை தெரிவித்த ரஜினி என்னால் நடிக்க முடியவில்லை என்றாலும் இந்த படத்திற்கு நான் என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று தான் தங்கியிருந்த அறையை இந்த படத்தின் கதை விவாதத்திற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கொடுத்தார். அது மட்டுமின்றி இன்னும் பல உதவிகளும் செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில்தான் இந்த படத்தில் ஸ்ரீதர் அவர்களிடம் அடிக்கடி வாய்ப்பு கேட்டு வந்த சுரேஷ் ஹீரோவானார். சாந்தி கிருஷ்ணாவும் இந்த படத்தில் தான் அறிமுகமானார். சாந்தி கிருஷ்ணா யார் என்பது தற்போதைய தலைமுறைக்கு தெரியாது என்பதால் ஒரு விளக்கம். விஜய், சூர்யா நடித்த நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் ரகுவரன் ஜோடியாக அதாவது விஜய்க்கு அண்ணியாக நடித்திருப்பார்.

பன்னீர் புஷ்பங்கள் கதை என்னவென்றால் சுரேஷ் மற்றும் சாந்தி கிருஷ்ணா ஒரே பள்ளியில் படிப்பார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்படும். இந்த நிலையில் தான் அந்த பள்ளிக்கு பிரதாப் போத்தன் ஆசிரியராக வருவார். அப்போது அவர் சாந்தி கிருஷ்ணாவின் அவுட் ஹவுஸில்தான் தங்கி இருப்பார்.

எனவே சாந்தி கிருஷ்ணா மற்றும் பிரதாப் ஆகிய இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வார்கள். தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள். இது சுரேஷுக்கு மிகவும் ஆத்திரமாக இருக்கும். தங்களது காதலுக்கு பிரதாப் பிரச்சனையாக இருப்பதாக நினைப்பார்.

கமல் – ரஜினி வேண்டவே வேண்டாம்.. ஸ்ரீதர் மறுப்பு.. சமாதானம் செய்த உதவியாளர்கள்.. இளமை ஊஞ்சலாடுகிறது உருவான கதை..!

இந்த நிலையில் தான் சுரேஷின் நண்பர்கள் வீட்டை விட்டு இருவரும் ஓடிப் போய் விடுங்கள் என்று ஐடியா கொடுப்பார்கள். அப்போது இருவரும் ரயிலில் ஏறி ஊரை விட்டு ஓடுவதற்கு தயாராக இருக்கும்போது அங்கு பிரதாப் போத்தன் வருவார். இந்த பெண்ணை நீ அழைத்துக்கொண்டு செல்கிறாயே, வழியில் ஒரு நான்கு பேர் அந்த பெண்ணை தாக்க வந்தால் உன்னால் காப்பாற்ற முடியுமா? உன்னால் அந்த பெண்ணை வைத்து மூன்று வேளை சோறு போட முடியுமா? அவருக்கு தேவையானதை வாங்கி கொடுக்க முடியுமா? என கன்னத்தில் அறைகிற மாதிரி சில கேள்விகளை கேட்பார்.

panneer pushpangal

இது காதலே இல்லை, இது பருவ வயதில் வரும் ஒரு பருவ கோளாறு, இதை காதல் என்று தவறாக நினைத்து உன்னுடைய வாழ்க்கை மட்டுமின்றி அந்த பெண்ணின் வாழ்க்கையும் கெடுத்து விடாதே என்று அறிவுரை கூறுவார். அதன் பின்னால்தான் இருவரும் மனம் திருந்தி அவரவர் வீடுகளுக்கு சென்று தங்களுடைய படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.

இளவயதில் ஏற்படும் பருவ கோளாறு காதல் அல்ல என்பதை இளைஞர்களுக்கு கன்னத்தில் அறையும்படி சொன்ன திரைப்படம் தான் பன்னீர் புஷ்பங்கள். இந்த படத்தில் சுரேஷின் கேரக்டரில் கமல்ஹாசனும், பிரதாப் போத்தன் கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்க இருந்தனர். ஆனால் விதி வசத்தால் அவர்கள் நடிக்க முடியவில்லை. ஒருவேளை கமல், ரஜினி இந்த படத்தில் நடித்திருந்தால் இன்று வரை பேசப்படும் ஒரு படமாக இருந்திருக்கும்.

1981ம் ஆண்டு ஜூலை மூன்றாம் தேதி இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு பின்தான் சுரேஷ் பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தார்.

சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஸ்ரீதர் இயக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இசை அமைக்க பாரதி – வாசு ஆகிய இருவரும் தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தனர் என்பதால் அந்த நன்றி கடனுக்காக இந்த படத்துக்கு இளையராஜா ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் இசையமைத்து கொடுத்தார் என்றும் கூறப்படுவதுண்டு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews