நடித்தது 30 படம்… ஆனால் சொத்து மட்டும் 3300 கோடியா? நடிகர் அரவிந்த்சாமியின் மறுப்பக்கம்!

Published:

நடிகர் அரவிந்த்சாமி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் சுமார் 30 படங்களில்தான் நடித்துள்ளார். ஆனால் 3 ஆயிரத்து 300 கோடி கொண்ட வர்த்தக சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் என்பதுதான் பலரும் அறியாத ரகசியமாக உள்ளது.

இவர் ரஜினி நடித்த தளபதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து மணிரத்னத்தின் படமான ’ரோஜா’ படத்தில் நாயகனாக அரவிந்த்சாமி நடித்தார். அந்த படம் அவரை அகில இந்திய அளவில் பிரபலமாக்கியது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே ஆகிய படங்களில் நடித்து வெற்றிப்பயணத்தை தொடர்ந்தார். பொதுவாக நடிகர் அரவிந்த்சாமி எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசாத்தியமாக நடிக்கும் திறமை படைத்தவர். தனது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அரவிந்த்சாமி 2000ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை.

சினிமாவை தாண்டி அரவிந்த்சாமி மிகத்திறமையான தொழிலதிபர் என்பது பலருக்கும் தெரியாது. அவர் தனது தந்தை நடத்தி வந்த வி.டி.சுவாமி அண்ட் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்த தொடங்கினார்.

ஆனால் இங்கே தான் விதியின் சதி விளையாடியது. கடந்த 2005ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு விபத்தில் அரவிந்த் சுவாமியின் முதுகு தண்டில் வலது பக்கத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது கால்கள் செயல் இழந்து நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் சிகிச்சை பெற வேண்டிய நிலை இருந்தது.

விக்னேஷ் சிவன் குடும்பத்தினரால் படாதபாடு படும் நயன்தாரா! இதுக்கு ஒரு எண்டே இல்லையா…

மருத்துவ சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அரவிந்த்சாமி தனது நிறுவனத்தின் பெயரை இன்டெர் ப்ரோ குளோபல் என்று மாற்றிக் கொண்டார். அடுத்ததாக டேலண்ட் மக்ஸிமஸ் என்ற நிறுவனத்தை அரவிந்த்சாமி தொடங்கினார்.

தற்போழுது டேலண்ட் மக்ஸிமஸ் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 3300 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...