விக்னேஷ் சிவன் குடும்பத்தினரால் படாதபாடு படும் நயன்தாரா! இதுக்கு ஒரு எண்டே இல்லையா…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு தனது நீண்ட கால காதலரும் திரைப்பட இயக்குனருமான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் இந்த தம்பதியினருக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நயன்தாரா மீண்டும் படங்களில் பிஸியாக இருக்கும் நிலையில் விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதம் மற்றும் உறவினர்கள் திருச்சி மாவட்டம் லால்குடி போலீஸ் துணை சூப்ரண்ட் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் பூர்வீக சொத்தை விக்னேஷ் சிவனின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து. இவருடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். இவர்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை உடன் பிறந்தவர்களின் அனுமதியில்லாமல் சிவக்கொழுந்து அவரது மனைவி உட்பட குடும்பத்தினர் வேறு ஒரு நபருக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லால்குடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதம் மற்றும் பெரியப்பா மாணிக்கம் ஆகியோர் புகார் மனு ஒன்றை அழித்துள்ளனர். அதில் பூர்வீக சொத்தை தங்களுக்கே தெரியாமல் ஏமாற்றி விற்றுள்ளதாகவும், மோசடியாக பொது சொத்தை விற்ற சிவகொழுந்துவின் மனைவி மீனாகுமாரி, மகன் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சிவக்கொழுந்துவின் தம்பியான குஞ்சிதபாதம் என்பவருக்கு இருதய குழாயில் அடைப்பு காரணமாக இருதய அறுவை சிகிச்சை செய்ய ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இட்லி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வரும் குஞ்சிதபாதம் மற்றும் அவரது மனைவி சரோஜாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை திரட்டுவது என்பது இயலாத ஒன்றாக உள்ளது . அதனால் சொத்தில் உள்ள பங்கை தந்தால் மட்டுமே கணவனின் உயிரை காப்பாற்ற முடியும் என குஞ்சிதபாதத்தின் மனைவி சரோஜா கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.

தனுஷின் 50வது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? இன்று பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு..

விக்னேஷ் சிவனின் தந்தையுடன் பிறந்தவர்கள் அனைவரும் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் தனது தம்பி குஞ்சிதபாதத்திற்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் தான் காரணம் என பெரியப்பா மாணிக்கம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தவரும் நிலையில் இந்த புகார் தொடர்பாக இன்னும் விக்னேஷ் சிவன், நயன்தாரா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.