திமுக, அதிமுகவுக்கு மாற்றே தமிழக அரசியலில் இல்லையா? என ஏங்கி தவிக்கும் மக்களை விஜய் ஏமாற்றுவாரா? நான் தான் மாற்றம்ன்னு சொல்லிட்டு அரசியலுக்கு வந்தவங்க எல்லாருமே திராவிடத்துல கைகோர்த்துட்டாங்க.. விஜய்யும் அப்படித்தானா? என்.டி.ஏவுல சேர்ந்து 50 சீட் வாங்குறதுக்கு எதுக்கு விஜய்? இதை விஷால், சூர்யா கூட செய்யலாமே? சினிமாவில் நம்பர் ஒன்னாக இருக்கும் விஜய், அரசியலில் நம்பர் 2, நம்பர் 3க்கு சென்றால் மக்கள் அவரை நம்புவார்களா?மார்ச் 14, 2026, 07:52
விஜய் சொல்வது போல் திமுக ஒன்னும் பவளவிழா பாப்பா இல்லை, அது பாறை.. பாறையில தனியா போய் மோதுனா சங்குதான்.. கூட்டத்தோட போய் அடிச்சா தான் பாறையை பொளக்க முடியும்.. தவெக தனித்து போட்டியிட்டா விஜய்யே போராடி தான் ஜெயிப்பாரு.. 1 சீட்டுக்கு மேல கிடைக்க வாய்ப்பே இல்லை.. யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் விஜய்.. என்.டி.ஏவுக்குள்ள வந்தா இன்னும் கொஞ்ச வருஷம் விஜய் அரசியல் பண்ணலாம், இல்லைன்னா 2026 தேர்தல் முடிஞ்சதும் கடையை மூட வேண்டியது தான்.. அரசியல் விமர்சகர்கள்..!மார்ச் 14, 2026, 07:46
விஜய்யோட உண்மையான டார்கெட் அரசியல் எதிரியும் இல்லை, கொள்கை எதிரியும் இல்லை.. அதிமுகவை 3வது இடத்திற்கு தள்ளுவது தான் அவரது நோக்கம்.. ஐசியூவில் இருக்கும் அதிமுகவை எப்படி அவரே நார்மல் வார்டுக்கு கொண்டு வர முயற்சிப்பார்.. விஜய்யின் பிளானே வேற.. இந்த தேர்தலில் ஒரு திராவிட கட்சியை தோற்கடிக்குறது இல்லை, சுத்தமா அழிச்சிடனும், அதுக்கு அப்புறம் இன்னொரு திராவிட கட்சியோட ஈசியா மோதிடலாம்.. இது புரியாம நிறைய பேரு விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு போவாருன்னு பேசிக்கிட்டு இருக்காங்க.. விஜய்க்கு நெருக்கமான நிர்வாகிகள்..!மார்ச் 13, 2026, 19:06
விஜய் தனித்து போட்டியிட்டால் அவர் நிற்கும் தொகுதியில் மட்டும் தான் வெற்றி கிடைக்கும்.. திமுக, அதிமுகவே தனித்து நிற்காத நிலையில் விஜய்க்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை.. திமுக, அதிமுக ரெண்டு பேரில் யாரையாவது ஒருவரை ஜெயிக்க வைக்கவா விஜய் கட்சி ஆரம்பித்தார்? மத்திய அரசின் பவரையும், மாநில அரசின் பவரையும் ஒரே நேரத்தில் எதிர்ப்பது அரசியல் தற்கொலைக்கு சமம்.. விஜய்க்கு அறிவுரை கூறிய நெருங்கிய நண்பர்கள்?மார்ச் 13, 2026, 18:34
தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. அதிருப்தியால் வெளியேறுகிறதா விசிக.. திமுக மீது கடும் கோபத்தில் 2 கம்யூனிஸ்ட் கட்சிகள்.. வைகோவும் கூட்டணியில் தொடர வாய்ப்பு குறைவா? இவர்கள் எல்லோரும் விஜய்யோடு சேர்ந்தால் என்ன ஆகும்? இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அது இன்னொரு மக்கள் நல கூட்டணியா? அல்லது இரு திராவிட கட்சிகளையும் வீழ்த்தும் கூட்டணியா? பாஜகவுடன் சேராத இந்த கூட்டணிக்கு சிறுபான்மையர் ஆதரவு தர வாய்ப்பு அதிகம்.. மக்கள் என்ன நினைக்கிறார்களோ?மார்ச் 12, 2026, 15:46
பவன் கல்யாண் மட்டுமல்ல.. ஒரு படையையே களத்தில் இறங்கிய அமித்ஷா.. எப்படியாவது விஜய்யை கூட்டிட்டு வந்துருங்க.. களத்தில் 2 ஆந்திர தொழிலதிபர்கள்.. துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமான ஜெகதீஷ், ஒரு ஐஏஎஸ் அதிகாரி.. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும், விஜய் கரைய மாட்டாரா? இவ்வளவு தூரம் அன்பா சொல்லி கேட்கலைன்னா, அதுக்கு அப்புறம் இருக்கவே இருக்குது சிபிஐ.. மிரட்டி பணிய வைக்கவும் பிளான் பி அமித்ஷாவிடம் இருக்குதா?மார்ச் 12, 2026, 10:40
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நீங்கள் அரசியலும் செய்ய முடியாது.. சினிமாவிலும் நடிக்க முடியாது.. ஒரு பக்கம் திமுக, இன்னொரு பக்கம் அதிமுக.. போதாக்குறைக்கு பாஜக என மாறி மாறி அடிப்பார்கள்.. வெளிநாட்டுக்கு தப்பி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.. முதலில் திமுக ஆட்சியை அகற்றுவோம், அதிகாரத்தை கைப்பற்றுவோம், அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம்.. விஜய்யை பயமுறுத்தினாரா பவன் கல்யாண்?மார்ச் 11, 2026, 21:10
பாஜக கொள்கை எதிரின்னு சொன்னது சொன்னதுதான்.. கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.. துணை முதல்வராவற்கு நான் அரசியலுக்கு வரவில்லை.. நம்பர் 2 ஆக இருக்க எனக்கு எப்போதும் பிடிக்காது.. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி நம்பர் 1 என் இடம்.. அந்த இடம் கிடைக்குற வரைக்கும் போராடுவேன்.. சினிமாவில் சம்பாதித்தது போதும்.. அரசியலில் நம்பர் 1 ஆகிற வரைக்கும் விடமாட்டேன்.. தமிழக மக்களை திராவிடத்தில் இருந்து காப்பாற்றியே தீருவேன்.. விஜய் ஆவேசப்பட்டாரா?மார்ச் 11, 2026, 08:20
சீமான் மாதிரி கடைசி வரைக்கும் பதவி இல்லாம இருக்க போறீங்களா? என்னை மாதிரி துணை முதல்வர் பதவி வாங்கி கட்சியை வளர்க்க போறீங்களா? விஜய்யிடம் பவன் கல்யாண் கேட்ட கேள்வி.. தனியா நின்னு யாராலும் ஆட்சியை பிடிக்க முடியாது.. மாய உலகத்துல இருந்து வெளியே வாங்க விஜய்? உங்களுக்கு கெளரவமான எண்ணிக்கையில் தொகுதிகள், துணை முதல்வர் பதவி நான் வாங்கி தர்றேன்..மார்ச் 10, 2026, 22:12
ஒன்னு விஜய் நம்ம கூட்டணிக்கு வரனும், இல்லைன்னா அரசியலே வேண்டாம்ன்னு தெறிச்சி ஓடனும்.. டெல்லியின் சக்திவாய்ந்த தலைவர் ஆவேசம்.. விஜய் தனியா நின்னு பிரிக்கிற ஒவ்வொரு ஓட்டும் திமுகவுக்கு சாதகமாகிவிடும்.. இன்னும் கொஞ்சம் நாள் பார்ப்போம், வழிக்கு வரலைன்னா வேற நடவடிக்கை தான்.. விஜய் எப்படி போட்டியிடுவாரு? எப்படி பிரச்சாரம் செய்வாருன்னு பார்த்திடலாம்? வழிக்கு வருவாரா? வந்து பார் என தைரியமாக நிற்பாரா விஜய்?மார்ச் 10, 2026, 20:24