அடிவயிறு தொப்பை பிரச்சனையா…. கரைக்க எளிதான வழிமுறைகள் இதோ!

Published:

பொதுவாக நம் உடல் ஆரோக்கியமாக மற்றும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் சத்தான பழங்கள்,டயட், உடற்பயிற்சி போன்றவற்றை செய்கிறோம். ஆனால் சிலருக்கு அடி வயிற்றில் ஏற்படும் தொப்பை என்பது பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கும் இது பெரிய பிரச்சனையாக உள்ளது.

இதனை எப்படி கையாள்வது என்னும் வழியை நாம் அறிந்திருந்தால் இதை சுலபமாக கையாளலாம். நம் உடலில் கொழுப்பு சேருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அவற்றை சரி செய்து கொண்டால் நமக்கு பொருத்தமான உடல் அமைப்பை பெறலாம்.

தண்ணீர் தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது, மேலும் கொழுப்பை கரைக்க உதவுகிறது என்று கூறினால் நம்புவீர்களா… இது மட்டுமல்லாமல் இது பசி உணர்வையும் கட்டுப்படுத்த உதவுகிறது. தண்ணீரில் எந்த கலோரிகளும் இல்லை. அதனால் அது உடல் எடை அதிகரிப்பை ஊக்குவிப்பதில்லை.

சரியான அளவில் தூக்கம் இல்லாத போது அதிகப்படியான உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். எனவே நாம் நல்லபடியாக உறங்குவது மிக முக்கியமாகும். தொப்பை கொழுப்புகளை குறைக்க உணவை தவிர்க்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும்.

இது உண்மையில் ஒரு எதிர்மறையான நடைமுறையாகும். இதனால் உங்கள் கீழ் வயிற்றில் கொழுப்புகள் குவிவதற்கான வாய்ப்புகளை அதிகம் உள்ளன. நீங்கள் தினசரி உணவை தவிர்ப்பதற்கு பதிலாக உட்கொள்ளும் கலோரி அளவை குறைக்கலாம். தினமும் மூன்று வேளையும் உணவை உண்ணலாம் .ஆனால் சாதாரணமாக உண்ணும் அளவைவிட சற்று குறைத்து உணவை உண்ண முயற்சி செய்யலாம்.

பொதுவாக உடல் குறைப்பில் ஈடுபடுபவர்கள் நினைப்பது உடற்பயிற்சி ஒன்றுதான். உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் உங்களுக்கென ஒரு இலக்கை வைத்து அதற்கென போதுமான நேரத்தை செலவழித்து உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.

சிறுநீரகத்தை இயற்கையாக சுத்தம் செய்ய வீட்டுலே கிடைக்கும் எளிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..

கிரீன் டீ எடையை இழக்க உதவுகிறது என ஆய்வுகள் கூறுகிறது, நாள் ஒன்றிற்கு சரியான நேரம் மற்றும் போதுமான அளவு கிரீன் டீ எடுத்துக் கொண்டால் கொழுப்புகளை குறைக்க முடியும் .நாம் முழு ஆரோக்கியமாக இருக்க உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அதைப்போல மன ஆரோக்கியமும் முக்கியமாகும் . மன அழுத்தம் உடலில் நிறைய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் மன அழுத்தத்தை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன அவற்றை நீங்களே முயற்சிக்கலாம்.

மேலும் உங்களுக்காக...