விருச்சிகம் ஆவணி மாத ராசி பலன் 2023!

Published:

விருச்சிக ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை அமர்க்களமான மாதமாக இருக்கும். 2 ஆம் இடத்தினை குரு பகவானும்- செவ்வாய் பகவானும் பார்வையிடுவதால் யோக பலன்கள் இரட்டிப்பாக இருக்கும்.

குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி, குதூகலம் அதிகரிக்கும். பொருளாதாரரீதியாக பெரிய அளவில் பணவரவு இருக்கும்; பணரீதியாக பெரிய திருப்புமுனை ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பழைய கடன்களை அடைப்பீர்கள். இருப்பினும் சுப செலவுரீதியாக புதிய கடன்களையும் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டினைப் பெறுவீர்கள்; உங்களின் செல்வாக்கு அலுவலகத்தில் அதிகரிக்கும்.

உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கும்.

உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களின் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் ஏற்படும்.

ராசிநாதன் 11 ஆம் இடத்தில் இருப்பதால் நற்பலன்களையே கொடுப்பார்; தொட்டது துலங்கும் மாதமாக இருக்கும். பூர்விகத்தில் வீடு வாங்குதல், தோட்டம் வாங்குதல், மனை வாங்குதல் போன்ற காரியங்கள் கைகூடும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

குழந்தைகளின் உயர் கல்விரீதியான கனவுகள் நனவாகும், உயர்கல்வி ரீதியாக அரசின் கடனுதவிகள் கிடைக்கும். தொழில் செய்வோர் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர்ப் பயணங்கள் அலைச்சலைக் கொடுத்தாலும், பணவரவினைக் கொடுப்பதாய் இருக்கும்.

உங்களிடம் பிரச்சினை செய்த எதிரிகள் உங்களைக் கண்டு ஓடி ஒளிவர்.

மேலும் உங்களுக்காக...