துலாம் வைகாசி மாத ராசி பலன் 2023!

Published:

மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் வைகாசி மாதமாகும். துலாம் ராசியினைப் பொறுத்தவரை உடல் நலன் சார்ந்த பிரச்சினைகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்; அதிலும் பெண்கள் உடல் நலன் மீது கூடுதல் அக்கறை செலுத்தவும்.

வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது ஆவணங்களை உடன் எடுத்துச் செல்லுதல் அவசியம். மேலும் வீட்டில் பெரியோரின் உடல் நலன் சார்ந்த மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

தொழில்ரீதியாக பெரிய அளவில் லாபத்தினைப் பார்ப்பீர்கள். வேலை தேடுவோருக்கு கடல் கடந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறும். மேலும் உங்களின் கனவு வேலைக்காக இருக்கும் வேலையினை விடுவீர்கள்.

மிகப் பெரிய மாற்றங்கள் நிறைந்த மாதமாக வைகாசி மாதம் இருக்கும். புதிதாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளை மிகவும் தைரியத்துடன் எடுப்பீர்கள். குழந்தைகளுடன் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். மேலும் குழந்தைகள் உங்களுக்குப் பெருமை சேர்ப்பர்.

குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே மனதளவில் வெறுமை தோன்றும். மேலும் கணவன் வழி உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பெரிய அளவில் பணப் புழக்கம் இருக்காது, கடன்கள் வாங்கிச் செலவு செய்வீர்கள், இருப்பினும் செலவுகள் ஆதாயம் தருவதாய் அமையும். மாணவர்களைப் பொறுத்தவரை உயர்கல்வி ரீதியாக நினைத்த கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெறும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

நரசிம்மப் பெருமாள் வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் மேன்மை ஏற்படும்.

மேலும் உங்களுக்காக...