கன்னி வைகாசி மாத ராசி பலன் 2023!

Published:

மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் வைகாசி மாதமாகும். கன்னி ராசியினைப் பொறுத்தவரை 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சூர்ய பகவான் உள்ளார். குடும்பத்துடன் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். மேலும் பொங்கலிட்டு படையலிட்டு கடவுளை தரிசனம் செய்து வருவீர்கள்.

தந்தை வழியாக ஆதாயப் பலன்கள் ஏற்படும். மேலும் மனைவி வழிரீதியிலான் உறவுகளால் பல வகையான உதவிகளும் கிடைக்கப் பெறும். அரசுரீதியாக நீங்கள் எதிர்பார்த்த கடன்கள்/ உதவிகள் கிடைக்கப் பெறும். குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நிச்சயம் நற் செய்தி கிடைக்கும்.

செவ்வாய் பகவான் நீச்சம் பெற்றுள்ளார், வீடு, வாகனங்களைப் புதிதாக வாங்கி மகிழ்வீர்கள். மேலும் வீடு வாங்குதல், வீடு சார்ந்த இடமாற்றம் போன்ற விஷயங்கள் நடந்தேறும்.

மேலும் விற்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த வீடு மற்றும் மனைகள் விற்று பணம் கைவந்து சேரும்.

பூர்வீகச் சொத்துகள்ரீதியான பிரச்சினைகள் சார்ந்த வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினை கொஞ்சம் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். பணப் புழக்கம் நிறைந்த மாதமாகவே வைகாசி மாதம் இருக்கும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

அருகில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு ஒவ்வொரு திங்கள் கிழமையும் சென்று வருவது நன்மை பயக்கும்.

மேலும் உங்களுக்காக...