துலாம் ஆவணி மாத ராசி பலன் 2023!

Published:

துலாம் ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை விபரீத ராஜ யோகம் நிறைந்த மாதமாக இருக்கும். சுக்கிர பகவான் 10 ஆம் இடத்தில் உள்ளார், மேலும் ராசியை குரு பகவான் பார்க்கிறார்.

கௌரவம், புகழ், செல்வாக்கு, அந்தஸ்து அனைத்தும் உயரும் காலகட்டமாக உள்ளது. செவ்வாய் பகவான் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். பொருளாதாரரீதியாக பணவரவு சிறப்பாக இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தொழில்ரீதியாக செய்யும் சிறு சிறு முதலீடுகளும் பெரிய லாபத்தினைக் கொடுக்கும். பணவரவு ஒருபுறம் வந்தாலும், மற்றொருபுறம் செலவினங்கள் மிக அதிகமாகவே இருக்கும்; விரயச் செலவுகளைத் தவிர்க்க சேமிப்பில் கவனம் செலுத்துங்கள்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த வேலை தட்டிப் போகும், வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்திலும் தாமதங்கள் ஏற்படும்.

வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். இடம் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்கள் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும். உடன் பிறப்புகள் பொருளாதார ரீதியாக உங்களின் உதவியினை நாடுவர்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சனி பகவான் 2 ஆம் இடத்தினைப் பார்ப்பதால் யோக பலன்களையே கொடுப்பார்; விபரீத ராஜ யோகங்கள் ஏற்படும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு பெரிய அளவில் இருக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை தள்ளிப் போன திருமணங்களும் விறுவிறுவென நடந்தேறும்.

தந்தையால் உதவிகள் கிடைக்கப் பெறும், சொத்துரீதியாக பங்குபிரித்தல் சுமுகமாக நடைபெறும்.

மேலும் உங்களுக்காக...