சிம்மம் பங்குனி மாத ராசி பலன் 2023!

சிம்ம ராசியினைப் பொறுத்தவரை 7 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் சாதகமற்ற சூழ்நிலையினைக் கொடுப்பார். அவப் பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. உடல் நலனில் அக்கறை தேவை. குருவின் பார்வைபலம் உங்கள்மீது படுவதால் தன்னம்பிக்கை…

simmam

சிம்ம ராசியினைப் பொறுத்தவரை 7 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் சாதகமற்ற சூழ்நிலையினைக் கொடுப்பார். அவப் பெயர் ஏற்பட வாய்ப்புண்டு.

உடல் நலனில் அக்கறை தேவை. குருவின் பார்வைபலம் உங்கள்மீது படுவதால் தன்னம்பிக்கை மற்றும் தெளிவான சிந்தனை ஏற்படும். புதன் பங்குனி மாத முற்பாதியில் நீச்ச பங்கம் அடைவதால் தன லாபம் அதிகரிக்கும், வாங்கிய பழைய கடன்கள் அடைபடும். திடீர் பண யோகம் ஏற்படும்.

தசம ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் விலகிவிட்டார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நேர்மறையான விஷயங்களை ஏற்படுத்துவார். 7 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் சங்கடங்களைக் கொடுத்தாலும் 8 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவானும், புதன் பகவானும் யோக பலன்களைக் கொடுப்பர்.

குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானம் வலுப் பெறவுள்ளது. குடும்பத்தில் அதீதமான மகிழ்ச்சி நிறைந்து காணப்படுவீர்கள். 10 ஆம் இடத்திற்கு வரவுள்ள சுக்கிரன் கெடு பலன்களைக் கொடுக்கவுள்ள நிலையில் குருபகவான் அதன் தாக்கத்தினைக் கொடுத்து நற்பலன்களாக மாற்றிக் கொடுப்பார்.

குருவுடன் இணைந்த சூர்ய பகவான் சனி பகவானின் தாக்கத்தைக் குறைத்து ஆதாயத்தினை ஏற்படுத்திக் கொடுப்பார்; எதிரிகளைத் துவம்சம் செய்யும் தைரியத்தினைக் கொடுப்பார்.

நண்பர்களால் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும்; இது குடும்பத்தில் எதிரொலிக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.