கடகம் பங்குனி மாத ராசி பலன் 2023!

கடக ராசியினைப் பொறுத்தவரை பாக்கிய குரு மாதம் முழுவதும் நேர்மறையான பலன்களைக் கொடுப்பார். சுக்கிரன் 10 ஆம் இடத்தில் உள்ளார்; அவர் 11 ஆம் இடத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகும்வரை எந்தவொரு விஷயத்தைச் செய்யும்போதும் சிறிது…

kadagam

கடக ராசியினைப் பொறுத்தவரை பாக்கிய குரு மாதம் முழுவதும் நேர்மறையான பலன்களைக் கொடுப்பார். சுக்கிரன் 10 ஆம் இடத்தில் உள்ளார்; அவர் 11 ஆம் இடத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகும்வரை எந்தவொரு விஷயத்தைச் செய்யும்போதும் சிறிது கவனத்துடன் இருத்தல் நல்லது.

விரய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் பலன்கள் குறைவாக இருக்குமே தவிர எதிர்மறையான பலன்களைக் கொடுக்கமாட்டார்.

8 ஆம் இடத்தில் சனி பகவான் இருந்து குடும்ப ஸ்தானத்தையும், வாக்கு ஸ்தானத்தையும் பார்க்கிறார். வார்த்தை ப்ரத்யேகம் சார்ந்த பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.

புதன் நீச்ச பங்கம் அடைவதால் பணவரவு ஒருபுறம் சுபச் செலவுகள் மற்றொரு புறம் என்று இருக்கும். வரவைவிட செலவு மிகுதியாவதால் கையில் பணம் தங்காது.

தந்தைவழி உறவினர்கள்ரீதியாக வீண் செலவுகள் ஏற்படும், மேலும் தந்தையின் உடல் நலன் ரீதியாகவும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சுய தொழில் செய்வோர் முதலீட்டைப் போட்டு அபிவிருத்தி போன்ற விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை சக பணியாளர்களுடன் மனக் கசப்புகள், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதுவரை வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்துவந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் வேலை கிடைக்கப் பெறும்.

ராசிக்கு குரு பார்வை இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்; கடன்சார்ந்த பிரச்சினைகள் சமாளிக்கக்கூடிய அளவில் இருக்கும். குழந்தைகளால் மேன்மை அடைவீர்கள்.