கன்னி பங்குனி மாத ராசி பலன் 2023!

Published:

கன்னி ராசியினைப் பொறுத்தவரை சில புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள், மேலும் பங்குனி மாதத்தின் முற்பாதியில் தேவையற்ற செயல்களை செய்து மன வருத்தம் கொள்வீர்கள்.

பேசும்போது கவனமாகச் செயல்படுதல் வேண்டும். குரு பகவான் மாதம் முழுவதும் நற்பலன்களைத் தருவதாய் இருக்கிறார். 8 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் வருமானத்திற்குக் குறைவில்லாமல் உங்களை வைத்திருப்பார்.

தந்தையின் அனுசரணை உங்களுக்குக் கிடைக்கும், தொழில்சார்ந்து முதலீடு செய்யும் முயற்சிகளில் மும்முரமாகக் களம் இறங்குவீர்கள். சமூக அந்தஸ்தில் பெரிய அளவில் இருப்போர் உங்களுக்கு புதிய நண்பர்களாகக் கிடைக்கப் பெறுவார்கள். அவர்களின் உதவியினை உதாசீனப் படுத்தாமல் ஏற்றுக் கொள்ளுதல் நல்லது.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை உடல் ஆரோக்கியம்ரீதியாக கவனம் செலுத்துங்கள். விரய ஸ்தானத்தில் சனி பார்வை இருப்பதால் கடன் சார்ந்த உதவிகள் கிடைத்தாலும் அது வீண் விரயமாகச் செலவாகிவிடும்.

2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் வார்த்தைகளில் விரக்தி மனப்பான்மை இருக்கும்படி பேசும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். சிக்கல்கள் ஏற்படும் நிலையில் சமயோசிதமாகப் பேசிவிட்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறுவது நல்லது.

தசம ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் உடல் ஆரோக்கியம்ரீதியான பிரச்சினைகள் ஏற்படும். தாயாருடன் மன ஸ்தாபங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும், பழைய கடன்களை அடைக்கும் அளவு ஆதாயம் இருக்கும். பூமி சார்ந்த முதலீடுகளைச் செய்வீர்கள்.

மேலும் உங்களுக்காக...