சிம்மம் கார்த்திகை மாத ராசி பலன் 2022!

Published:

ராசிக்கு தசம ஸ்தானமான 10 ஆம் ராசியில் செவ்வாய் பகவான் உள்ளார். ராசிக்கு 4 ஆம் இடத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் என மூன்று கிரகங்கள் இணைந்து உள்ளது.

குழந்தைகளின் பிடிவாதம் அதிகரித்துக் காணப்படும்; இதனால் சங்கடங்கள் நிறைந்து காணப்படுவீர்கள். குடும்பத்தில் தேவையற்ற சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும், உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கும் பெற்றோருக்கும் இடையில் மனக் கசப்புகள் ஏற்படும்.

வெற்றி ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரன் 4 ஆம் இடத்தில் இருப்பதால் எப்பேர்பட்ட பிரச்சினையினையும் பேசிச் சமாளிக்கக் கூடிய ஆற்றல் நிறைந்து காணப்படுவீர்கள்.

சூர்யன் செவ்வாயின் பார்வையில் இருப்பதால் அரசாங்கரீதியாக உதவிகள் கிடைக்கப் பெறும். தொழில் செய்வோருக்கு அபிவிருத்திரீதியாக அரசு உதவிகள் கிடைக்கப் பெறும்.

அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாதீர்கள்; சட்டரீதியாக பல பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும். ஆரோக்கிய ரீதியாக நரம்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும், குழந்தைகள் கல்வி நலனில் மேம்பட்டுக் காணப்படுவார்கள்.

இடமாற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலைவாய்ப்புரீதியாக தேவையில்லாத பல குழப்பங்கள் ஏற்பட்டாலும் உயர் அதிகாரிகளால் அந்தப் பிரச்சினையில் இருந்து மீள்வீர்கள்.

வெளியூர்ப் பயணம் உட்பட அலைச்சல் நிறைந்த மாதமாக இருக்கும். உடன் பிறப்புகளுடன் மனக் கசப்பு ஏற்படும்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment