கன்னி கார்த்திகை மாத ராசி பலன் 2022!

செவ்வாய் பகவான் விரய ஸ்தானத்தில் இருப்பதால் பூர்விகச் சொத்துகள் ரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும்.

3 ஆம் இடத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் என கிரகங்கள் இணைந்து உள்ளது. குரு பார்வையில் செவ்வாய் இருப்பதால் தந்தையால் மன வருத்தம் ஏற்படும், தந்தையின் ஆரோக்கியம் ரீதியாக மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

சனி பகவான் 5 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்திற்கு இடப் பெயர்ச்சி செய்கிறார். எடுத்த காரியங்கள் வெற்றிக்கு இட்டுச் செல்லும். வேலைவாய்ப்புரீதியாக புது வேலைக்கு முயற்சிப்போருக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.

திருமண காரியங்களுக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு வரன் உறுதி செய்தல், நிச்சயதார்த்தம் வரை விறுவிறுவென நடந்தேறும். கணவன்- மனைவியினைப் பொறுத்தவரை பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

தொழில்ரீதியாக நீங்கள் இதுவரை சந்தித்த மந்தநிலையில் இருந்து விடுபடுவீர்கள். ராசிக்கு 4 ஆம் இடத்தில் புதன் பகவான் உள்ளார், நண்பர்கள்ரீதியாக நன்மைகள் ஏற்படும்.

கார்த்திகை மாதத்தில் 10 சதவீதம் எதிர்மறையான விஷயங்கள் நடந்தாலும் 90% நேர்மறையான விஷயங்களே நடக்கும். எடுத்த காரியத்தை முடித்து வெற்றியும் காண்பீர்கள். 4 ஆம் இடத்திற்கு புதன் இடப் பெயர்வு செய்கிறார். அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கு மற்றும் புகழ் அதிகரிக்கும்.