கடகம் கார்த்திகை மாத ராசி பலன் 2022!

Published:

கார்த்திகை மாதத்தினைப் பொறுத்தவரை 7 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவானைத் தவிர அனைத்து கிரகங்களும் சாதகமாக உள்ளது. எந்தவொரு விஷயத்தினை நீங்கள் செய்யும்போதும் உறவினர்கள் முட்டுக் கட்டை போடுவர். இதை பெரிதளவில் பிரச்சினை செய்யாமல் சுமுகமாக எடுத்துச் செல்வது நல்லது.

கார்த்திகை முதல் பாதியில் புதன் பெரிதளவில் நற்பலன்களைக் கொடுக்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் புதன் ஆதாயப் பலன்களைக் கொடுப்பார். சுக்கிரன் 5 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்திற்கு இடப் பெயர்வு செய்வார், மறைமுகச் செலவுகளுக்கு இட்டுச் செல்வார்.

சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் தவறான செய்கைகள் செய்ய வழிகோலும், நாம் தடுமாற்றம் இல்லாமல் செயல்படுதல் வேண்டும். அஷ்டமச் சனியால் குடும்பத்தில் மனரீதியான பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் பணரீதியான பிரச்சினைகள் ஏற்படும்.

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள், பணவரவு பெரிதளவில் இருக்காது. தொழில்ரீதியாக அபிவிருத்தி போன்ற விஷயங்களைத் தற்போதைக்கு கையில் எடுக்காதீர்கள்.

குழந்தைகள் பிடிவாதத்துடன் செயல்படுவார்கள், இதனால் நீங்கள் மனவருத்தம் அடைந்து காணப்படுவீர்கள். குடும்ப விஷயங்களை உறவினர்கள் மத்தியில் பேசாதீர்கள், இது பல பிரச்சினைகள் மற்றும் சங்கடங்களை ஏற்படுத்தும்.

சக பணியாளர்களால் வேலைரீதியாக பல பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளுங்கள்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment