சிம்மம் ஆடி மாத ராசி பலன் 2023!

Published:

ஆடி மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் சிம்ம ராசிக்குப் பெயர்கிறார்; சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்; புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் முழுவதும் உங்களுக்குத் தேவையற்ற செலவுகள் ஏற்படும். செலவுக்கு ஏற்றார்போல் உங்களுக்கு வருமானம் பெரிதளவில் இருக்காது. கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மாத பிற்பாதியில் தொழில்ரீதியாக வருமானம் அதிகரிக்கும்; மேலும் பிள்ளைகள் ரீதியாக வருமானம் கிடைக்கப் பெறும். தொழிலை அபிவிருத்தி செய்தோர் தற்போது லாபத்தினைப் பெறுவர். சுக்கிரன்- சூர்யன் சேர்க்கை உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுத்துவதாய் இருக்கும்.

வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே பெரும் பிரச்சினைகள் ஏற்படும். முன் கோபத்தால் உடன் பிறப்புகளுடன் பிரிவு ஏற்படும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதம் செய்து அவப் பெயரினைப் பெறுவீர்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை படிப்பில் முன்னேற்றம் இருக்கும்; மேலும் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியத்துடன் காணப்படுவர். வியாபாரரீதியாக முதலீடுகளைச் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்; நிச்சயம் அது வளர்ச்சியினையே கொடுக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

அண்டை வீட்டார்கள் மற்றும் உறவினர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும். எடுத்த காரியத்தில் வெற்றி பெற நிறைய செலவுகளைச் செய்வீர்கள். தேவையற்ற விஷயங்களில் செலவு செய்வதை முடிந்தளவு தவிர்க்கவும்.

மேலும் உங்களுக்காக...