ஆடி மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் சிம்ம ராசிக்குப் பெயர்கிறார்; சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்; புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் ஏற்றத்தினைக் கொடுக்கக்கூடிய மாதமாக இருந்தாலும் மற்றொருபுறம் செலவுகளைக் கொடுக்கும் மாதமாகவும் உள்ளது.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
விரய ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் சுக்கிரனுடன் இணைவதால் எதிர்காலம் குறித்த திட்டங்களுக்காக பணம் முதலீடு செய்வீர்கள். மேலும் வியாபார அபிவிருத்தி லாபத்திற்கு இட்டுச் செல்லும், எதிரிகள் உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள்.
பொருளாதாரரீதியாக தனவரவு சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மேலும் குடும்ப உறுப்பினர்களிடையே உங்களின் வாக்குச் சாதூர்யத்தால் பல விஷயங்களையும் உங்களுக்குத் தகுந்தாற்போல் செய்து முடிப்பீர்கள்.
உடன் பிறப்புகளால் உதவிகள் கிடைக்கப் பெறும், தாயாரின் உடல் நலனில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பூமி தொடர்பான விஷயங்களால் லாபம் ஏற்படும். வீடு, மனை என சொத்துகள் வாங்க ஏற்ற மாதமாக இருக்கும்.
வீண் செலவுகள் குறையும்; தேவையான செலவுகளைச் செய்து குடும்ப உறுப்பினர்களின் அன்பையும் பாராட்டினையும் பெறுவீர்கள்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
தந்தைவழி உறவினர்களுடனான பிரச்சினைகள் சமரசத்துக்கு வரும். மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் அதீத ஆர்வம் கொண்டு இருப்பர்.