ரிஷபம் மாசி மாத ராசி பலன் 2023!

By Gayathri A

Published:

குரு பகவான் ஆட்சி பலத்துடன் சுக்கிரனுடன் இணைந்து மீன ராசியில் பயணிக்க உள்ளார். செவ்வாய் பகவான் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். புதன் பகவான் 9 ஆம் இடத்தில் உள்ளார். ராகு – கேது 6 மற்றும் 12 ஆம் இடங்களில் உள்ளது.

தொட்டது துலங்கும் மாதமாக இருக்கும். அடுக்கடுக்கான கஷ்டங்களை அனுபவித்து வந்த உங்களுக்கு ஆதாயப் பலன்கள் கொடுக்கும் மாதமாக மாசி மாதம் இருக்கும்.

செவ்வாய் பகவான் வக்ர கதியில் இருந்து நிவர்த்தி பெற்று நேர்கதியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். வேலை செய்யும் இடங்களில் இருந்த மோசமான சூழ்நிலைகள் சரியாகி உங்களுக்கு மன மகிழ்ச்சியினைக் கொடுக்கும்.

ராசிநாதன் உச்சம் பெற்று இருப்பதால் தொழில் ரீதியாக லாபம் இரட்டிப்பாக இருக்கும். புதுத் தொழில் செய்தல், தொழிலை அபிவிருத்தி செய்தல் போன்ற விஷயங்களைச் செய்வீர்கள்.

கணவன்- மனைவி இடையே உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடங்கல், தாமதம் போன்றவை ஏற்படும்.

குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நற் செய்தி கிடைக்கப் பெறும். உடல் ஆரோக்கியம்ரீதியாக வீண் விரயச் செலவுகள் ஏற்படும். தாயின் உடல் நலனில் அக்கறை தேவை.

உடன் பிறப்புகளால் சொத்துகள்ரீதியான பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும் உங்களுக்காக...