மேஷம் மாசி மாத ராசி பலன் 2023!

Published:

மேஷ ராசியினைப் பொறுத்தவரை சுக்கிரன் உச்சம் அடைந்து உள்ளார், குரு பகவான் ஆட்சியில் உள்ளார்.  செவ்வாய் பகவான் 2 ஆம் இடத்தில் உள்ளார், சனி பகவான் கும்ப ராசியில் பயணிப்பார். புதன் பகவான் 10 ஆம் இடத்தில் உள்ளார்.

செவ்வாய் பகவானால் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். வேலை செய்யும் இடங்களில் இருந்த மோசமான நிலைமைகள், அதிருப்திகள் சரியாகும், இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகள் சரியாகும்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு, புகழ், பாராட்டு கிடைக்கப் பெறும். தற்காலிக வேலைவாய்ப்பில் இருப்போருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்.

தொழில்ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் கைகூடும். கணவன்- மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருந்த சண்டை- சச்சரவுகள் சரியாகும். கடன் தொல்லைகள் தீரும். பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பணிரீதியாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.

வண்டி, வாகன மாற்றங்களைச் செய்வீர்கள், வீடு, மனை வாங்கும் முயற்சியில் களம் இறங்குவீர்கள். உடல் ஆரோக்கியரீதியாக ஏற்கனவே இருந்துவந்த உடல் நலன் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும்.

மேலும் உங்களுக்காக...