மிதுனம் மாசி மாத ராசி பலன் 2023!

Published:

சுக்கிரன்- குருபகவான் மீன ராசியில் உள்ளனர், செவ்வாய் பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சாரிக்கிறார். புதன் பகவான் 8 ஆம் இடத்தில் பயணிக்கிறார். ராகு- கேது 5 மற்றும் 11 ஆகிய இடங்களில் உள்ளனர்.

செவ்வாய் பகவான் கடந்த காலங்களில் வக்ர நிலையில் இருந்தநிலையில் பல விஷயங்களும் இழு பறியாக உங்களுக்கு இருந்திருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, மன சங்கடங்கள் என நீங்கள் சந்தித்த மோசமான நிலைமைகள் மாறும்.

பிரிந்த தொழில் கூட்டாளர்கள் மீண்டும் ஒன்று சேர்வர், தெய்வ அனுகிரகம் நிறைந்த மாதமாக மாசி மாதம் இருக்கும். நின்றுபோன திருமணம் நடந்தேறும், பாதியில் நிறுத்தப்பட்ட வீடு கட்டும் வேலைகள் மீண்டும் துவங்கி விறுவிறுவென நடக்கப் பெறும்.

நண்பர்களுடன் வெளியூர், சுற்றுலா போன்ற பொழுது போக்கு சார்ந்த விஷயங்களுக்கு நேரம் செலவிடுவீர்கள். பூர்விகச் சொத்துகள் வந்து சேரும், தன்னம்பிக்கையுடன் எந்தவொரு காரியத்தையும் செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் தாண்டவமாடும், பொருளாதார ஏற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். வண்டி, வாகனங்கள் ரீதியான கடன்கள் அடையும். தாய் வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும்.

உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து மீள்வீர்கள்.

மேலும் உங்களுக்காக...