ரிஷபம் கார்த்திகை மாத ராசி பலன் 2022!

Published:

எதற்கெடுத்தாலும் கோபத்தினைக் காட்டி பிறருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள். பேச்சில் கவனம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பிரச்சினைகள் ஏற்படும்.

ராசிக்கு 7 ஆம் இடத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களும் ராசியில் செவ்வாயும் என இட அமர்வு உள்ளது. செவ்வாயும் சூர்யனும் நேர் பார்வையில் பார்த்துக் கொள்கின்றனர். திருமண வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவில் பிரச்சினைகள் ஏற்படும். இது பிரிவுவரை இட்டுச் செல்ல வாய்ப்புண்டு.

வேலைவாய்ப்புரீதியான விஷயங்கள் உங்களுக்கு சாதகப் பலன்களைக் கொடுக்கும். பல முக்கிய முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். தொழில்ரீதியாக நீங்கள் எடுக்கும் புது முயற்சிகள் லாபத்தினை அதிகரிக்கும். தொழில் கூட்டாளர்களுடனான உறவைக் கையாள்வதில் கூடுதல் கவனம் தேவை.

பாக்ய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் நன்மையினைச் செய்வார். குடும்பத்தில் பணவரவு அதிகமாக இருக்கும்; அதற்கேற்றார்போல் செலவினங்களும் அதிகமாக இருக்கும்.

பெற்றோர் ரீதியாக உதவிகள் கிடைக்கப் பெறும். கார்த்திகை மாதத்தின் இரண்டாம் பாதியில் வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான சூழல் ஏற்படும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன்கள் கைகூடும். புதிதாக வேலைவாய்ப்பு தேடுபவர்கள் முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment