மிதுனம் கார்த்திகை மாத ராசி பலன் 2022!

Published:

செவ்வாய் விரய ஸ்தானத்தில் உள்ளார், சூர்யன், சுக்கிரன், புதன் கிரகங்கள் இணைந்து 6 ஆம் இடத்தில் உள்ளது.

வேலைவாய்ப்புரீதியாக புதிய வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு என எதிர்பார்த்த அனைத்தும் நடந்தேறும். சக பணியாளர்கள் குறித்து புறம் பேசுதல் உங்களைப் பெரும் பிரச்சினைக்கு இட்டுச் செல்லும்.

எதிரிகள் உங்களைக் கண்டு ஓடி ஒளிவார்கள், ஆரோக்கியம் ரீதியாக பிரச்சினைகள் ஏற்படும். விரயச் செலவு மருத்துவச் செலவாக ஏற்படும். 8 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் சங்கடங்களை குடும்பத்தில் ஏற்படுத்துகிறார்.

சப்தம ஸ்தானத்துக்கு புதனும்- சுக்கிரனும் இடப்பெயர்ச்சி ஆகின்றன. இதனால் குடும்பத்தில் நிம்மதி குறையும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே மன வெறுமை ஏற்படும். அமைதி காத்தால் பிரச்சினை தானாகவே குறையும்.

நக்கல் பேச்சுகள் சீரியசான விவாதங்களாக மாறி நண்பர்களுக்குள் விரிசலை ஏற்படுத்தும், புன்முறுவலால் மட்டும் இதற்கு தீர்வு காண முடியும். பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக முன்பைவிட மேம்பட்டுக் காணப்படுவார்கள்.

பெற்றோரின் உடல் நலனில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடங்கல் ஏற்படும், பொறுமையுடன் காத்திருக்கவும்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment