மேஷம் கார்த்திகை மாத ராசி பலன் 2022!

Published:

செவ்வாய் ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார், கார்த்திகை மாதம் உங்களுக்கு அனுகூலப் பலன்களைக் கொடுக்கும் மாதமாக இருக்கும்.

செவ்வாயின் இட அமர்வு உங்களுக்கு முன் கோபத்தினை ஏற்படுத்தும், வீண் வாக்குவாதம், சண்டை போன்றவை நிச்சயம் ஏற்படும். பொறுமையுடன் செயல்படுதல் நல்லது.

புதன் பகவான், சூர்யன், சுக்கிரன் இணைந்து 8 ஆம் இடத்தில் உள்ளனர். இந்த இட அமைவு ஒரு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பல நற்பலன்களையும் கையோடு கொடுக்கும்.

தள்ளிப் போன திருமண காரியங்கள் கைகூடிவரும். குழந்தைப் பேறுக்காக எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நற் செய்தி தேடி வரும். வார்த்தைகளில் கவனம் தேவை. உறவினர்களுடன் பிரச்சினைகள் ஏற்படும்.

குரு பகவான் விரய இடத்தில் உள்ளார். அசையாச் சொத்துகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவீர்கள். கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வீட்டில் சுப காரியங்களால் சுப செலவுகள் ஏற்படும்.

கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும். மருத்துவ ரீதியாக செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்களுடனான உறவில் பிரச்சினைகள் ஏற்படும்.

தொழில் செய்வோருக்கு பணப் புழக்கம் அதிகமான மாதமாக இருக்கும். மாணவர்களின் செயல்பாடுகளில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும், ஆனால் கூடுதலான பேச்சால் அவப் பெயர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. மனதில் நினைப்பதை அப்படியே பேசாமல் நிதானித்துப் பேசுதல் நல்லது.

சுவாமி மலை முருகனைத் தரிசித்து வருதல் நல்லது.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment