ரிஷபம் சித்திரை மாத ராசி பலன் 2023!

Published:

ரிஷப ராசியினைப் பொறுத்தவரை விரயாதிபதி செவ்வாய் இரண்டாம் இடத்தில் உள்ளார். இதனால் விரயச் செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். ராசியில் ராசிநாதன் சுக்கிரன் உள்ளார். லாப ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் விரய ஸ்தானத்துக்குள் நுழைகிறார்.

சொத்துகள் ரீதியாக ராஜ யோகம் கிடைக்கப் பெறும், வண்டி வாகனங்களைப் புதுப்பிக்க முடியாமல் இவ்வளவு காலம் கஷ்டப்பட்ட நிலையில் தற்போது புது வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். தாயாரின் உடல் நலன் ரீதியாக மருத்துவச் செலவுகள் ஏற்படும். குழந்தைகள் ரீதியாக மேற்படிப்பு சார்ந்த செலவுகள் ஏற்படும். வீட்டினைப் புதுப்பித்தல், வீடு கட்டுதல் தொடர்பாக பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள்.

மேலும் வியாபாரம் ரீதியாக புது முதலீடுகளைச் செய்வீர்கள்; எடுக்கும் புது முயற்சிகள் லாபத்தினையும் வெற்றியினையும் கொடுக்கும். எதிரிகள் உங்களைக் கண்டு ஓடி ஒளிவார்கள். ராசிக்கு 6 ஆம் இடத்தில் குரு பகவானின் பார்வை விழுவதால் வாங்கிய பழைய கடன்களை அடைக்கும் முயற்சியினை குரு பகவான் ஏற்படுத்திக் கொடுப்பார்.

முடிந்தளவு தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். உடன் பிறப்புகளுடன் மனக் கசப்பு ஏற்படும். குடும்பத் தலைவிகள் வாக்குச் சாதூர்யத்துடன் செயல்படுவார்கள். மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக தெளிவான சிந்தனையுடன் இருப்பார்கள்.

பூமி தொடர்பான முதலீடுகள் பெரிய அளவில் நஷ்டத்தினைக் கொடுப்பதாய் இருக்கும்.

மேலும் உங்களுக்காக...