மேஷம் சித்திரை மாத ராசி பலன் 2023!

Published:

மேஷ ராசியினைப் பொறுத்தவரை செவ்வாய் பகவானின் பெயர்ச்சியால் தடுமாற்றங்கள், சிறு சிறு சங்கடங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள்.

செய்யும் எந்தவொரு செயலையும் குழப்ப மனநிலையுடன் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்; பெரியோர்களின் ஆலோசனைப்படி எந்தவொரு காரியத்தையும் செய்யுங்கள்.

விரய ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் கடந்த காலங்களில் விரயச் செலவுகளைக் கொடுத்தார். குரு பகவான் ராசிக்குள் வருவதால் ஜென்ம குரு ஆரோக்கிய ரீதியான குறைபாடுகளை ஏற்படுத்துவார்.

குரு பகவானின் பார்வை பலத்தால் வேலை செய்யும் இடங்களில் பதவி உயர்வு கிடைக்கும்; குழந்தை பாக்கியத்துக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி கிடைக்கப் பெறும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை திருமணம் சட்டென கைகூடும்; விறுவிறுவென திருமணம் முடிந்துவிடும். பணவரவு ரீதியாக சிறு தாமதங்கள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் சரியாகும்.

இல்லத்தரசிகளின் பணிச் சுமை குறையும், வீடு வாங்குவது தொடர்பாக திடீர் யோகம் ஏற்படும். வண்டி, வாகனங்களைப் புதுப்பிக்கும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்.

பூர்விகச் சொத்துகள் ரீதியாக இருந்த பிரச்சினைகள் சரியாகும்.  வியாபாரம் செய்வோருக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக சித்திரை மாதம் இருக்கும். குடும்பத்துடன் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று வருதல் வேண்டும்.

மேலும் உங்களுக்காக...