மிதுனம் சித்திரை மாத ராசி பலன் 2023!

By Gayathri A

Published:

மிதுன ராசியினைப் பொறுத்தவரை வெற்றிகள் கிடைக்கும் மாதமாக சித்திரை மாதமாக இருக்கும். இதுவரை செய்யத் தயங்கிய விஷயங்களைத் தைரியத்துடன் செய்வீர்கள்.

மேலும் நீங்கள் புது முயற்சிகளை தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். 5 ஆம் இடத்தினைக் குரு பகவான் பார்ப்பதால் குழந்தைகள் ரீதியாக உங்களின் மரியாதை உயரும், குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நற்செய்தி கிடைக்கப்பெறும்.

வியாபாரிகள் அபிவிருத்தி சார்ந்த விஷயங்களில் பெரிய அளவில் லாபத்தினைக் காண்பீர்கள். குல தெய்வ வழிபாடு உங்களுக்கு பல ஆதாயங்களைக் கொடுக்கும்.

நண்பர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும். பண வரவு சிறப்பாகவே இருக்கும். எதிரிகளின் தொல்லை அடங்கும், மேலும் பல எதிரிகளும் உங்களுக்கு நண்பர் ஆவார்கள்.

இதுவரை திருமணம் சார்ந்த விஷயங்கள் தடைபட்டு வந்தநிலையில் திருமணம் சட்டென நடந்தேறும். வீட்டில் சுப செலவுகள் இருக்கும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பதவி உயர்வு, சம்பள உயர்வு என உங்கள் மனதினை மகிழ்விக்கும் விஷயங்கள் நடந்தேறும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறும்.

உடன் பிறப்புகளுடனான மனக் கசப்புகள் மற்றும் பிரச்சினைகள் சரியாகும்.  பணப்பற்றாக்குறை இல்லாத மாதமாக இருக்கும். பூர்விகச் சொத்துகள் ரீதியான விஷயங்கள் இழுபறியிலேயே இருக்கும். உங்களின் வாழ்க்கைத் தரம் மிகச் சிறப்பாக மாறப்போகின்றது.

மேலும் உங்களுக்காக...