கன்னி புத்தாண்டு ராசி பலன் 2023!

கடந்த கால அனுபவங்களில் மோசமான தாக்கங்களைச் சந்தித்து இருப்பீர்கள். தற்போது அதில் இருந்து விடுபடுவீர்கள். 6 ஆம் இடத்தில் சனி பகவான், 8 ஆம் இடத்தில் ராகு பகவான் உள்ளனர். வேலைவாய்ப்புரீதியாக வேலைப்பளு கூடுதலாக…

Kanni

கடந்த கால அனுபவங்களில் மோசமான தாக்கங்களைச் சந்தித்து இருப்பீர்கள். தற்போது அதில் இருந்து விடுபடுவீர்கள். 6 ஆம் இடத்தில் சனி பகவான், 8 ஆம் இடத்தில் ராகு பகவான் உள்ளனர்.

வேலைவாய்ப்புரீதியாக வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.  வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை குரு பார்வை இருப்பதால் விறுவிறுவென திருமண காரியங்களைச் செய்தல் நல்லது. காதலர்களைப் பொறுத்தவரையில் காதலை வீட்டில் சொல்லும்போது நிச்சயம் எதிர்ப்பு இருக்கும்.

ராகு- கேது இரண்டும் 2 மற்றும் 8 ஆம் இடங்களில் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் வேலையினைவிடுத்து தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருத்தல் நல்லது.

மாணவர்களைப் பொறுத்தவரை புதன் பகவானின் ஆசியால் கல்விரீதியாக நன்மை பயக்கும் ஆண்டாக இருக்கும். குழந்தைகள் உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளைச் சந்திப்பார்கள்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை தேவையில்லாத விஷயங்களில் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். பழைய பிரச்சினைகளைப் பேசி புதிய சண்டைக்கு வழிவகுக்காதீர்கள்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை அஜீரணம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஜாமீன் போடும் விஷயங்கள் எதிலும் ஈடுபடாமல் இருத்தல் நல்லது. கடன் கொடுக்கல் வாங்கலில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுதல் நல்லது.