சிம்மம் புத்தாண்டு ராசி பலன் 2023!

Published:

சூர்யன் வலுவாக இருப்பார். சனி பகவான் 7 ஆம் இடத்தில் ஆட்சி பெறுகிறார். சனி பகவானின் பார்வை பணம், வேலை, தொழில், பயணங்கள் சார்ந்த விஷயங்களில் நேர்மறையான தாக்கத்தினைக் கொடுப்பார்.

குரு பகவான் 8 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் இடத்திற்கு இடப் பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் ஆசியால் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சனி பகவானின் பார்வை அவமானங்கள் மற்றும் கெட்ட பெயரினை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் உடல் ஆரோக்கியம் ரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும்.

மே மாதத்திற்குப் பின் வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை ஓரளவு சிறப்பான மாற்றத்தினைக் காண்பீர்கள். எதிலும் வெற்றிபெற தொடர்ந்து கடுமையான முயற்சியினைச் செய்ய வேண்டும்.

திருமண காரியங்களுக்குக் காத்திருப்போருக்கு தடைகள் ஏற்பட்டாலும், 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை சனி பகவான் கலகம் ஏற்படுத்திவிடுவார். பொறுமையுடன் செயல்படாவிட்டால் கணவன்- மனைவி பிரிய வாய்ப்புண்டு.

காதலர்கள் பிரிவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால் வீண் வாக்குவாதப் பேச்சுகளைத் தவிர்க்கவும். குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போர் மே மாதத்திற்குப் பின் நற் செய்தியினை எதிர்பார்க்கலாம்.

மாணவர்களைப் பொறுத்தவரை கடுமையான முயற்சி செய்தால் கனவுத் திட்டங்களை எண்ணியபடி செயல்படுத்த முடியும். இல்லத்தரசிகள் குடும்பத்தில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளைப் பெரிதளவில் மனதில் போட்டுக் கொள்ளாதீர்கள்.

மேலும் உங்களுக்காக...