துலாம் புத்தாண்டு ராசி பலன் 2023!

Published:

கடந்த ஆண்டில் 9 மாதங்கள் மிக மோசமான காலமாக இருந்திருக்கும். 2023 ஆம் ஆண்டு கடந்த ஆண்டைவிட ஓரளவு சிறப்பானதாக இருக்கும். சனி பகவான் 5 ஆம் இடத்தில் உள்ளார். புதன்- சூர்யன்- சுக்கிரன் இணைவு 8 மாதங்களும், செவ்வாய் பகவான் 7 மாதங்களும் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.

மே மாதங்கள் வரை குரு பகவானும் சாதகமாகவே உள்ளார். ராகு- கேது 1 மற்றும் 7 ஆம் இடத்தில் இருப்பர். வேலைவாய்ப்புரீதியாக ஓரளவு சாதகமானதாக இருக்கும். உங்களின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடங்கல்கள், போராட்டம் நிறைந்ததாக இருக்கும். வரன்கள் தட்டிப் போய்க் கொண்டே இருக்கும். குருவின் பார்வையால் குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நற் செய்தி கிடைக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை சிறிய அளவில் கவனச் சிதறல்கள் இருக்கும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

வண்டி, வாகனங்களை மாற்றுதல், வீடு மாற்றுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடுவீர்கள். பொருளாதாரம் ரீதியாக குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

அலைச்சல், கடுமையான முயற்சி என நீங்கள் தைரியத்துடன் போராடுவீர்கள்.

மேலும் உங்களுக்காக...