மிதுனம் மே மாத ராசி பலன் 2023!

Published:

மிதுன ராசியினைப் பொறுத்தவரை மே மாதத்தில் குரு- ராகு-சூர்யன்- புதன் என நான்கு கிரகங்களும் 11 ஆம் இடத்தில் உள்ளது. சனி பகவான் 9 ஆம் இடத்தில் உள்ளார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பாராத இடமாற்றம், சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கப் பெறும். மேலும் எதிர்பாராத பணவரவுகள் இருக்கும், தொழில்ரீதியாக வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்துக்குள் அடியெடுத்து வைப்பீர்கள்.

மேலும் கூட்டுத் தொழிலுக்கு நீங்கள் எதிர்பார்த்தது போன்ற சிறப்பான கூட்டணி அமையும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக இருந்த தடைகள் விலகி, விறுவிறுவென நிச்சயதார்த்தம், திருமண தேதி குறித்தல், பத்திரிக்கை அடித்தல் என அனைத்தும் நடக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை இதுவரை பிரிந்திருந்த தம்பதிகளும் ஒன்று சேர்வர்; கணவன் – மனைவி இருவரும் மனம் திறந்து பேசிக் கொள்வர். இதனால் புரிதல் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பூர்விகச் சொத்துகள்ரீதியாக இதுவரை இருந்த பிரச்சினைகள் சரியாகும். கோர்ட் வழக்குகள் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை இது மிகச் சிறந்த காலகட்டமாக இருக்கும்; மந்தநிலையில் இருந்தவர்களும் சுறுசுறுப்பாகச் செயல்படுவர்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை முன்பு இருந்த உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் சரியாகும். குடும்பத்துடன் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பத்தினை உங்கள் கட்டுக்குள் சிறப்பாகக் கொண்டு வருவீர்கள்.

மேலும் உங்களுக்காக...