மிதுனம் ஜூன் மாத ராசி பலன் 2023!

Published:

மிதுன ராசியினைப் பொறுத்தவரை இரண்டாம் இடத்தில் சுக்கிர பகவானும்- செவ்வாய் பகவானும் இட அமர்வு செய்துள்ளனர். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இது மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய காலகட்டம்.

முயற்சித்து வெற்றிக்காகக் காத்திருப்போருக்கு மிகச் சிறந்த மாற்றங்கள் நடக்கப் பெறும். தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்யவோ, தொழில் துவங்கவோ செய்யலாம்; ஆனால் ஆராய்ந்து அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுதல் வேண்டும்.

கிரகங்களின் இடப் பெயர்ச்சியினைக் கருத்தில் கொண்டால் வேலைவாய்ப்பு ரீதியாக புதிதாக எடுக்கும் முயற்சிகளை தொடர்ந்து எடுங்கள்; நிச்சயம் வெற்றியின் கனியைச் சுவைப்பீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை உங்களுக்குப் பிடித்த வரன் உங்கள் குடும்பத்தினருக்குப் பிடிக்காது; குடும்பத்தினருக்குப் பிடித்த வரன் உங்களுக்குப் பிடிக்காது என்பது போல் நகரும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை பொறுப்புகள் அதிகரித்துக் காணப்படும். மேலும் கணவன்- மனைவி இடையே பெரிய அளவிலான பிரச்சினைகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மாணவர்களைப் பொறுத்தவரை புதன் பகவானும்- சூர்ய பகவானும் ஜூன் மாதம் இரண்டாம் பாகத்தில் இணைகின்றனர். நீங்கள் உயர்கல்வி சார்ந்து எடுக்கும் முடிவுகளில் வெற்றியினைக் காண்பீர்கள்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இன்மையால் துன்பப்படுவீர்கள். மேலும் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும் உங்களுக்காக...