கடகம் ஜூன் மாத ராசி பலன் 2023!

Published:

கடக ராசியினைப் பொறுத்தவரை 10 ஆம் இடத்தில் குரு பகவான் ராகுவுடன் இணைந்துள்ளார். நீங்கள் மாற்றங்கள் குறித்து எந்நேரமும் நினைத்துக் கொண்டே இருப்பீர்கள்.

சனி பகவான் வக்ரம் அடைந்துள்ளார், இதுவரை நீடித்த தாமதங்கள் விலகும் காலகட்டமாக ஜூன் மாதம் இருக்கும். எப்படியாவது போராடி நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். இது நிச்சயம் உங்களின் நகர்வுகளை நகர்த்துவதாக இருக்கும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை ஏதாவது ஒரு மாற்றத்தினை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள். நடப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். சூர்யன் ரிஷப ராசியில் உள்ளார்; பொருளாதாரரீதியாக பணப் புழக்கம் சிறப்பாகவே இருக்கும்.

சுக்கிரன் 1 ஆம் இடத்தில் உள்ளார்; உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை சுக்கிரன் பார்த்துக் கொள்வார். திருமண காரியங்களைப் பொறுத்தவரை நீங்கள் தேர்வு செய்யும் வரனின் ஜாதக அமைப்பு சரியாக இருக்கும்பட்சத்தில் திருமண காரியங்கள் குறித்து அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கலாம்.

ஆனால் உங்கள் ஜாதகத்தினைக் கருத்தில் கொண்டால் திருமணம் சார்ந்த விஷயங்களில் பெரிய அளவில் தடைகள் காணப்படும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே பெரிய அளவிலான பிரச்சினைகள் ஏற்படும். புரிதலின்மையால் கணவன்- மனைவி பிரியும் நிலைக்குத் தள்ளப்படுவர்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மாணவர்களைப் பொறுத்தவரை வக்ர சனியால் கடந்த காலங்களில் உங்களின் முடிவுகளுக்கு எதிர்ப்புகள் நீடித்திருக்கும்; தற்போது அது விலகும் காலமாக இருக்கும். குடும்பத்தினர் உங்கள் முடிவுகளுக்கு உடன்படுவர்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் உங்களுக்காக...